Blogger இயக்குவது.
Loading...

Labels

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Followers

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Sociable

இந்த வலைப்பதிவில் தேடு

05 ஆகஸ்ட் 2011உலகம் பூராகவும் கடந்த 5 வருடங்களில் 72 அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் இணையக் கட்டமைப்புக்கள் ஹெக்கிங் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக இணைய மற்றும் கணனி பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி தெரிவித்துள்ளது.

இணையக் கட்டமைப்புகளின் மீதான இத்தாக்குதல்களின் பின்னணியில் ஒரு நாட்டின் அரசாங்கம் செயற்படுவதாகவும் அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து நடந்துவரும் இந்த ஹெக்கிங் சம்பவங்களில் அந்நாட்டின் ஒற்றர்களே ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதல்களின் பின்னால் உள்ள நாடு சீனா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்யாவும் அவ்வாறாக இருக்க வாய்ப்புக்கள் உள்ள போதிலும் சீனாவாக இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஐ.நா. சபை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உட்பட பல அமைப்புகள் மற்றும் அமெரிக்கா, தாய்வான, இந்தியா தென்கொரியா, வியட்நாம், கனடா ஆகிய நாடுகளினதும் இணையக் கட்டமைப்பு இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

சீனாவின் பீஜிங் மற்றும் சங்காய் நகரங்களில் இருந்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டிருந்த இன்னொரு நிறுவனமான டெல் செகுயர் வேர்க்ஸ் அறிவித்துள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்த அமைப்பை மட்டும் மையப்படுத்தி நடத்தப்படவில்லையெனவும் பல்வேறு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளின் இணையத்தளங்கள் ஹெக்கிங் செய்யப்பட்டுள்ளதாக மெக்காஃபி தெரிவித்துள்ளது. எந்த நாடு என வெளிப்படையாக மெக்காஃபி அறிவிக்காத போதிலும் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய ஹெக்கிங் என சுட்டிக் காட்டியுள்ளது.

2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தாக்குதல் 'பிஸ்ஸிங்' என அழைக்கப்படுகின்றது.


'பிஷிங்' (Phishing)


பொதுவாக இவை மின்னஞ்சல்கள் மூலமே நடத்தப்படுகின்றது. வைரஸ்களைக் கொண்ட மின்னஞ்சல்கள் நமது முகவரிக்கு வரும். நாம் அவற்றைத் திறந்து படிக்கும் வேளையில் நமக்கு தெரியாமல் அவை நமது கணனியில் வேறு சில பொருட்களை தரவிறக்கம் செய்துவிடும்.

இதனைத் தொடர்ந்து ஹெக்கர்கள் நமது தகவல்களை இலகுவாகத் திருடிக்கொள்ள ஆரம்பித்துவிடுவர்.

26 ஜூலை 2011

கிழக்கு ஆபிரிக்காவில் பஞ்சம் உக்கிரமடைந்து வருவதாகவும் இதனால் குழந்தைகள் அதிகளவில் உயிரிழந்து வருவதாகவும் ஐ.நா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
உலக நாடுகள் பட்டினிச் சாவை தடுக்க உடனே உதவுமாறும் பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் ஜிபவுடீ ஆகிய நாடுகள் வேகமாக பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சோமாலியாவில் உள்ள தாய்மார் தமது குழந்தைகளுக்கான உணவினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களை வீதிகளில் விட்டுச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் பல குழந்தைகள் போஷாகின்மையால் எழ முடியாமல் இருப்பதாகவும் சில குழந்தைகள் உயிரிழந்து காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஐ.நாவின் உணவு வழங்கும் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றமையே இதற்கான காரணமென அவ்வமைப்பின் உணவுத் திட்டத்திற்கான நிறைவேற்று இயக்குநர் ஜொசெட் சீரன் தெரிவித்துள்ளார்.

பஞ்சம் மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கென்யாவின் தடாப்பிலுள்ள 90,000 பேருக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள அகதி முகாமில் சுமார் 400,000 பேர் தங்கியுள்ளதாக ஐ.நா அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

தமக்கு உடனடியாக 360 மில்லியன் அமெரிக்கடொலர் நிதி தேவையென உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவையென ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது. 


போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான்.

ஆரம்ப காலத்தில் மற்றைய நிறுவனங்களின் இலத்திரனியல் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியது சீனா.

மென்பொருட்கள் முதல் ஆடைகள் வரை அனைத்தினையும் விட்டு வைக்கவில்லை.

போலி உற்பத்திகளை உருவாக்குவதில் அடுத்த பரிணாமமாக தற்போது சீனாவில் போலி கடைகளும் முளைவிடத் தொடங்கியுள்ளன.

இதற்கு முதன் முதலாக இலக்காகியுள்ளது 'அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்'.


அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ- பேட் ஆகியவை சீனாவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

சீனாவின் போலி உற்பத்தியாளர்கள் இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் . பல போலி அப்பிள் ஸ்ட்ரோர்ஸ் மற்றும் அனுமதியற்ற விநியோகஸ்தர்கள் அங்கு நிறைந்து வழிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நடைபெற்ற ஆரம்பகட்ட விசாரணைகளில் பல போலி அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய போலி ஸ்ட்ரோர்ஸ்கள் சீனாவில் மட்டுமன்றி வெனிசூலா மற்றும் ஸ்பெய்ன் உட்பட பல நாடுகளிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சீனாவில் அப்பிளின் உத்தியோகபூர்வ ஸ்ட்ரோர்கள் 4 மட்டுமே அமைந்துள்ளன.

இவற்றில் 2 பீஜிங்கிலும் மற்றைய இரண்டும் சங்காயிலுமே அமைந்துள்ளன.

மேலும் சிலர் அப்பிளின் அனுமதி பெற்ற விநியோகஸ்தர்கள் ஆவர்.

போலி உற்பத்திகள் அப்பிளின் வர்த்தக நாமத்திற்கும், தரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக அப்பிள் தற்போது கவலை வெளியிட்டுள்ளது.

கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தத்வரூபமாக நடைபெறும் போலி வியாபாரத்தினை நீங்களும் பாருங்கள்.


15 ஜூலை 2011

இணையத்தில் திரைப்படங்களை பார்த்து இரசிப்பதில் அனைவருக்கும் தனி விருப்பமுண்டு. குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களை பார்பதற்கென ஏராளமான தளங்கள் உள்ளன.

எனினும் சிலவற்றைப் பற்றியே நாம் அறிந்துள்ளோம்.

இன்று எமது செய்தியானது அத்தகைய தளங்கள் சிலவற்றைப் பற்றியது.

1) Movie Lanka

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் காணொளிகள் காணப்படுகின்றது.


2) Tamil Flix


இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை புதியவை, பழையவை, இடைக்காலம் என்று தனித்தனியாக வகைப் படுத்தி உள்ளனர்.

3) Padangal

இணையத்தில் பழைய திரைப்படங்களை தேடுபவர்களுக்கான தளம் இது.

4) Tamil Peek

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்கள் காணப்படுகின்றன. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர்.5) Tamil tvs.com

இந்த தளத்தில் புதிய, பழைய படங்கள் காணப்படுகின்றன.

6) Good Lanka

இந்த தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாடல்களை கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர்.

7) Tube Kolly

இத்தளத்திலும் பல புதிய, பழைய திரைப்படங்கள் காணப்படுகின்றன.

8) TamilVix

இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது.

9) Rajshree
இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

10) Thiruttu VCD

இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

07 ஜூன் 2011

அப்பிள் தனது ஐ கிளவுட் (iCloud) எனப்படும் மேக நினைவக சேவையை (cloud storage service) நேற்று அறிமுகப்படுத்தியது.

சென் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற அப்பிளின் மென்பொருள் அபிவிருத்தியாளர்களுக்கான மாநாட்டிலேயே இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐ கிளவுட்டானது 9 பிரதான அப்ளிகேஷன்களை கொண்டதாகும். இவற்றில் அதிகமானவை அப்பிளின் மொபைல் மீ சேவையில் காணப்பட்டதாகும்.

இப்புதிய சேவையானது பாவனையாளரின் தரவுகளை அதாவது மின்னஞ்சல்கள், அப்ளிகேஷன்கள், கோப்புக்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை ஒன்லைன் சேர்வரில் சேமித்து வைக்க உதவுவதுடன் கணனி மற்றும் மொபைல் உபகரணங்களின் ஊடாக அவற்றிற்குள் நுழையமுடியும்.
இதன் பிரகாரம் பாவனையாளர்கள் தாம் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கு இணையத்தின் ஊடாக வெவ்வேறு உபகரணங்களின் வாயிலாக நுழைய முடியும்.

குறித்த சேவையானது அப்பிளின் ஐ போன், ஐ பேட் மற்றும் மெக் ஆகியவற்றிற்கிடையில் ஒரு பாலமாக செயற்படுமென தெரிவிக்கின்றது.

உதாரணமாக ஐ கிளவுட் கணக்கொன்றினை வைத்திருக்கும் ஐ போன் பாவனையாளர் புதிய தொடர்பு இலக்கமொன்றினை பதிவு செய்வாராயின் அது உடனேயே அவரது ஐ கிளவுட் கணக்கிற்கு அனுப்பப்படுவதுடன் அப் பாவனையாளரின் மற்ற உபகரணங்களுடன் அது இணைக்கப்படும்.

மேலும் ஐ போனில் இரு புகைப்படம் எடுக்கப்படுமாயின் அதனை ஐபேட்டின் ஊடாக பார்வையிட முடியும்.

இச்சேவையானது அப்பிளின் ஐ ஓஎஸ் இயங்குதளத்தின் உதவியுடன் இயங்கும் ஐபோன், ஐ பேட் மற்றும் ஐ பொட் உபகரணங்களின் மூலம் உபயோகிக்க முடியும்.

இந்நிகழ்வில் அப்பிள் தனது ஐபேட் கணனி, ஐ போன் ஆகியவற்றின் இயங்குதளங்களின் மேம்படுத்திய 'iOS 5' என்ற புதிய தொகுப்பினையும் , மெக் வகை கணனிகளுக்கான 'Mac OS X Lion' இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியது.இவை புது வசதிகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளன.

இவையும் சந்தையில் வெளியாகும் முன்னரே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
15 மார்ச் 2011

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். 
மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள் , டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார். 


  

அட்லாண்டிஸ்கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். 


அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார். அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர். மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். 

17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகக் கூறப்படும் அட்லாண்டிஸ் தீவின் வரைபடம். 
ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது. 


தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
24 பிப்ரவரி 2011மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள் அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர்.

நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர்.

சென் டியாகோ தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது.

டைசன் ஸ்மித் என்ற 36 வயதான நபருக்குச் சாதாரண இதயத்தின் அருகில் வலது பக்கத்தில் இன்னொரு இதயம் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.

இதயத்தின் இடது இதயவறை, புது இதயத்துடன் சத்திரசிகிச்சையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றம் பெற்ற குருதி, பழைய இதயத்திலிருந்து புதிய இதயத்திற்குப் பாய்ச்சப்படும்.

இதன்பிறகு புதிய இடது இதயக்கீழறையிலிருந்து குருதியானது பெருநாடியின் மூலம் உடலின் பாகங்களுக்கும் பாய்ச்சப்படும். ஓர் இதயம் செய்யும் வேலையை இரு இதயங்களும் பகிர்ந்துகொள்ளும்.

குறித்த நபரின் இதயம் பலவீனமடைந்திருந்தமையினாலேயே அவருக்கு இன்னுமொரு இதயம் பொருந்தப்பட்டது. இச்சத்திர சிகிச்சையானது 'ஹெடரோடொபிக் ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேசன்' என அழைக்கப்படுகின்றது. மிகவும் அரியதொரு சத்திரசிகிச்சையாக இது கருதப்படுகின்றது.

இது நோயாளின் வாழ்நாளை 10 வருடங்களால் அதிகரிக்கும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


இரு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள்.