Blogger இயக்குவது.
Loading...

Labels

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Followers

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Sociable

Blog Archive

இந்த வலைப்பதிவில் தேடு

30 டிசம்பர் 2010


2010 ஆம் ஆண்டிற்கு விடைகொடுக்கும் தருவாயில் இன்றைய எனது செய்தியானது தொழிநுட்ப உலகில்
இவ்வருடத்தில் நிகழ்ந்த முக்கிய சில விடயங்களை நினைவுபடுத்தவுள்ளது.

இவற்றில் அதிகமான செய்திகளை நான் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள போதிலும் அவற்றை மீண்டும் திரும்பிப்பார்ப்போம்.


மொபைல் தொழிநுட்பம் (Mobile Technology)


1) எச்.டி.சி இவோ 4 ஜி

பிரபல எச்.டி.சி நிறுவனம் உலகின் முதலாவது வை-மெக்ஸ் தொழிநுட்பத்துடன் கூடிய இவோ 4 ஜி அதாவது நான்காவது தலைமுறை வலையமைப்பு
கையடக்கத்தொலைபேசியினை அறிமுகப்படுத்தியது.


2) அண்ட்ரோயிட் இயக்குதளம்

கூகுளின் அண்ரோயிட் இயக்குதளமானது உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்பிள் கையடக்கத்தொலைபேசிகளின் விற்பனையை முதல் முறையாக அண்ரோயிட் தொலைபேசிகள் முறியடித்தன.


3) அப்பிளின் ஐ-போன் 4 ஜி மற்றும் ஐ-பேட்

அப்பிள்  தனது ஐ-போன் வரிசையில் ஐ-போன் 4 ஜி யை அறிமுகப்படுத்தியது. சில நாட்களிலேயே அதன் அண்டனாவில் காணப்பட்ட கோளாறுகள் காரணமாக பெரிதும் விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  மற்றும் ஐபேட் எனும் சாதனத்தினையும் அறிமுகப்படுத்தியது.

4) கலெக்சி டெப்

கையடக்கத்தொலைபேசி உலகில் இது ஒரு மைல்கல் எனலாம். காரணம் இது ஒரு சிறிய கணனி மற்றும் கைப்பேசியின் இணைப்பாகும்.
சுமார் 7 அங்குல திரையைக் கொண்டதாகும்.


இவற்றைத்தவிர நொக்கியாவின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட என் 8 (N8), டெல்லின் ஸ்ரைக் (Dell Streak),  எல்.ஜியின் ஒப்டிமஸ்(Optimus ), சொனி எரிக்சனின் எக்ஸ்பீரியா(Xperia), விவாஸ்(Vivaz) தொடர் கையடக்கத்தொலைபேசிகள் மோட்டரோல்லாவின் மைல்ஸ்டோன்(Milestone), மைல்ஸ்டோன், ட்ரொயிட்(Droid) பேசிகள் ஆகியன பெரிதும் பேசப்பட்ட வகைகளாகும்.


சமூகவலையமைப்புக்கள் (Social Networking)


1) பேஸ்புக்

பேஸ்புக் தனது 500 மில்லியன் பாவனையாளர் என்ற மைல்கல்லினை எட்டியது இவ்வருடத்திலேயாகும்.

2) டுவிட்டர்

இவ்வருடத்தில் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் 200 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டியது.

3) டயஸ்போரா மற்றும் கூகுள் +1

பேஸ்புக்கிற்கு போட்டியாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தளங்களும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன.

4) பேஸ்புக் - ஸ்கைப் இணைவு

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகியன ஒன்றாக இணைந்ததும் இவ்வருடத்திலேயாகும்.கூகுள்
1) கூகுள் தானியங்கிக் கார்

கூகுள் முதன்முறையாக தனது தானியங்கிக் காரை பரீட்சித்துப் பார்த்து அதில் வெற்றியும் பெற்றது.

2) கூகுளின் 'குரோம் நெட்புக்'

கூகுள்  தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டது.


இவற்றைத்தவிர முக்கிய விடயங்களாக,


1) ஈரானை உலுக்கிய 'ஸ்டக்ஸ்னெட்' வைரஸ்அதி மேம்பட்ட வைரஸாக இது கருதப்படுகின்றது. ஈரானின் அணு உலைகளில் செயற்பட்டு வரும் கணனிகளைத் தாக்கவே இது ஏவப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

2) சீனாவின் அதிவேக சுப்பர் கணனி

டியானி (Tianhe) - 1 A என்ற அதிவேக கணனியை இவ்வருடத்தில் சீனா மீள் அறிமுகம் செய்தது.

இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புகளை மேற்கொள்ளக்கூடியதாகும்.


3) பிளக்பெரிக்குத் தடை

சவூதி உட்பட சில நாடுகள் பிளக்பெரிக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தன . இதன் சிக்கலான என்கிரிப்ஷன்களே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டது. எனினும் பின்னர் இத்தடை அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

29 டிசம்பர் 2010

அமெரிக்க இண்டியானா மாநிலத்திலுள்ள கரென் சிக்லர் என்ற பெண் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தெரிவதாக தெரிவிக்கின்றார்.

எல்வூட் நகரில் வசிக்கும் கரென் சிக்லர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட மார்பக எக்ஸ்ரே படத்திலேயே இயேசுவின் உருவம் தென்படுவதாக கரென் சிக்லா தெரிவிக்கின்றார். மேலும் இதனை தான் ஆணித்தரமாக நம்புவதாகவும் தெரிவிக்கின்றார்.

இதனை நிரூபிக்கும் வகையில் இவர் கூறும் சில விடயங்கள் இன்னும் விசித்திரமானவை.

இப் பெண்மணி அண்மையில் தனது வலது மார்பில் ஏற்பட்ட புற்றுநோய்க்கான அறுவைச்சிகிச்சைக்கு முகங்கொடுத்திருந்தார்.

அந்த சிகிச்சைக்கு முன் தேவையான சில பொருட்களை வாங்குவதற்கு கரென் சிக்லர் கடைக்குச் சென்றுள்ளார். 

இதன் போது முன் பின் அறிமுகமற்ற ஒருவர் கரேனை அணுகி "நீ குணப்படுத்தப்படுவாய்" என இயேசு கிறிஸ்து தெரிவிக்கச் சொன்னதாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றுள்ளார். 

எனினும் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்படும்வரை அதை அறிமுகமற்ற ஒருவரின் எதேச்சையான கூற்று என்றே கருதியதாக கரென் சிக்லர் தெரிவிக்கின்றார். 

இதனால் இயேசு கிறிஸ்து தனது புற்றுநோயை முற்றுமுழுதாக குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.28 டிசம்பர் 2010

                              
இந்திய ஆசிரமத்தில் சுருதி பாண்டே என்ற 6 வயதான சிறுமி உலகிலேயே வயது குறைந்த யோகா ஆசிரியையாகக் கருதப்படுகின்றார்.

இவர் தற்போது வட இந்தியாவிலுள்ள ஆசிரமமொன்றில் யோகா ஆசிரியையாக உள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இவரது குரு ஹரி சேட்டன் (வயது 67), சுருதி 4 வயதாக இருக்கும் போதே தன்னிடம் யோகா கற்பதற்காக சேர்ந்ததாகவும் அவளிடம் இருந்த சிறப்புத்திறமையை இனங்கண்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


தற்போது இச்சிறுமி காலை 5.30 மணிக்கே வகுப்பை ஆரம்பித்து விடுவார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அச்சிறுமி,

தனது வழிகாட்டல்களை ஏனையோர் பின்பற்றுவது தன்னை ஆசிரியை போல்  உணரச் செய்வதாகவும் தனது சகோதரன் யோகா கலையில் ஈடுபட்டதனாலேயே தனக்கும் ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றார்.

தற்போது 11 வயதான இவரது சகோதரர் ஹார்ஸ் குமார், 5 வயதிலேயே 84 யோக நிலைகளைக் கற்றமையால் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

          

இன்றைய நவீன மனிதனாவன் ஓமோசேபியன்ஸ் எனப்படும் ஆதிகால மனிதனின் வழித்தோன்றல்களே எனவும் இது 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகவும் கூறப்படுகிறது.

ஆதி மனித பரம்பரை ஆபிரிக்காவிலேயே தோன்றியதாகவும் பின்னர் படிப்படியாக மத்திய கிழக்கினூடாக ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடம்பெயர்ந்ததாகவும் இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டு வந்ததாகும்.

ஆனால் நேற்று மத்திய இஸ்ரேல் குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால மனிதனின் பற்கள் சுமார் 400,000 வருடங்கள் பழமையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவை நவீன மனிதனின் பற்களுடன் பெரிதும் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப் பற்களை எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் ஆகியவற்றிற்கு  உட்படுத்தியதாகவும் இவ்வாய்வில் ஈடுபட்டிருந்த டெல் அவிவ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடர்பான வரலாறானது  மீள எழுதப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதனை உறுதி செய்ய மேலும் பல ஆராய்ச்சிகள் அவசியம் எனஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசியர்  அவிவ் கோபர் தெரிவித்துள்ளார்.24 டிசம்பர் 2010
எம்மில் பலரால் இதுவரை அறியப்படாததும், அழிந்து போயிருக்கலாம் என விஞ்ஞானிகளால் கருதப்பட்டு வந்ததுமான 'சஹரன் சீடா' எனப்படும் பூனைக்குடும்பத்தை சேர்ந்த புலி வகையொன்றின் புகைப்படத்தினை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

விஞ்ஞானிகளால் பொருத்தப்பட்ட கமராவிற்கே இதன் புகைப்படம்
அகப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தில் இவ்வகை இதனைப்போன்ற  10 புலிகளே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் புகைப்படங்கள் அவர்கலின் தேடல்களுக்கு தற்போது புத்துயிர் அளித்துள்ளது.

இதனை கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து முயன்று வந்தனர்.

தற்போது
இதனோடு சேர்ந்து வேறு பல விலங்கினங்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

அப்புகைப்படங்களை காணுங்கள்
23 டிசம்பர் 2010

                              

நீதிக்கான புனிதப் போரில் அணு ஆயுதம் மூலம் தென்கொரியாவுக்கு பதில் வழங்கத் தாயார் வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வட மற்றும் தென் கொரியா நாடுகளின் எல்லையில் தென்கொரியா நடத்தி வரும் பயிற்சி மற்றும் ஒத்திகையானது போருக்கான முன்னேற்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஒத்திகையானது தென்கொரிய வரலாற்றில் மிகப்பெரியதாகும். இதன்போது தாங்கிகள், ஹெலிகொப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் பங்குகொண்டிருந்தன.

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலையை தவிர்ப்பதற்கு உலக நாடுகள் பல முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                    
பிரபல தொடர்பாடல் சேவையான ஸ்கைப்பினுள் நுழையமுடியவில்லையா?

அத்தொழிநுட்ப கோளாறிற்கு முகங்கொடுப்பது நீங்கள் மட்டுமல்ல!

இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர். 
( இச்செய்தி எழுதப்படும் வரை) 

இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.21 டிசம்பர் 2010

பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic engineering) மூலம் உருவாக்கியுள்ளனர்.

ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரினமானது மரபணுப் பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்டதாகும்.

இதனை தாம் எதிர்ப்பார்த்திருக்கவில்லையெனவும் ஆனால் தமக்கு இதன் குரல் மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். 

இதன் உருவாக்கமானது விஞ்ஞான உலகில் பாரியதொரு மைல் கல்லெனவும் கலப்புப்பிறப்பாக்கத்திற்கும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளிலும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.                                                                                                         


                                    

மனித உழைப்பும், விடாமுயற்சியும், தொழில்நுட்பமும் சேர்ந்தால் அனைத்தும் சாத்தியமாகும் என்பதை சீனர்கள் நீரூபித்துள்ளனர்.

ஆம்! 16 மாடிகளைக்கொண்ட விடுதியொன்றினை அவர்கள் வெறும் 6 நாட்களில் நிர்மாணித்துள்ளனர். சீனாவின் ஹுனான் மாகாணத்திலேயே இவ்விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

136 மணித்தியாலங்களில் நிர்மாணித்துமுடிக்கப்பட்ட அவ்விடுதியை நீங்களும் பாருங்கள்.


                                                                                  
 குழந்தையின் மொழியை கற்றுக்கொள்ளும் மூளையின் பாகம் தாயின் குரல் மூலமே செயற்படுத்தப்படுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மொன்ட்ரியல் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இவ்வாய்வினை மேற்கொண்டிருந்தனர். 


இவர்களின் ஆய்வின்படி குழந்தைகளின் மூளையின் மொழியை கற்கும் பகுதியானது தாயின் குரலுக்கு மட்டுமே துலங்களைக் காட்டுவதாகவும் மற்றையவர்களின் குரலுக்கு அவ்வாறு காட்டுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாய்விற்கு பல குழந்தைகளை உட்படுத்தியதாகவும் அவை உறங்கும்போது அவற்றின் தலைகளுக்கு இலக்ட்ரோட் வழங்கியுள்ளனர். 

இதன் போது குழந்தைகளின் தாய்க்கு அவர்களை ' ஹலோ ' என மெதுவாக அழைக்கும் படி கூறியுள்ளன. 

இதனைத்தொடர்ந்து வேறு பெண்களுக்கும் குழந்தைகளை அவ்வாறு அழைக்கும் படி கூறியுள்ளனர். 

குழந்தையின் தாய் அழைத்த போது குழந்தையின் மூளையின் இடதுபகுதி அதாவது மொழியினை செயற்படுத்தும் பகுதியின் மாற்றங்களை அவதானித்ததாகவும்.


 மற்றையவர்கள் அழைத்தபோது குரல்களை அடையாளங்கண்டு கொள்ளும் மூளையின் வலது பகுதியிலேயே மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

17 டிசம்பர் 2010உலகின் முதலாவது டுவல்-கோர் (Dual-core) புரசெஸரைக் கொண்ட அதிவேக கையடக்கத்தொலைபேசியினை எல்.ஜி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஒப்டிமஸ் எக்ஸ் 2 (Optimus X2) எனப்பெயரிடப்பட்டுள்ளது.

சந்தையிலுள்ள மற்றைய ஸ்மார்ட் போன்களை விட இது வேகமானதென எல்.ஜி உத்தரவாதமளித்துள்ளது.

இதில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
                                                                                                                                                             அண்ட்ரோயிட் புரோயோ 2.2 இயக்குதளத்தின் மூலம் இக் கையடக்கத் தொலைபேசிகள் இயங்கவுள்ளன.                                                                                                                                                                                                                                                              எனினும் பின்னர் ஜிஞ்ஜர் பிரட் 2.3 இற்கு மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.

மற்றும் வேகமான இணையவசதி, 8 மெகா பிக்ஸல் கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கான 1.3 மெகாபிக்ஸல் முன் கெமாரா 32 ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய மெமரி, 8 ஜிபி உள்ளக மெமரி என்பனவற்றையும் இது கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியானது அடுத்தமாதம் கொரியாவில் விற்பனைக்குவரவுள்ளது.


Key specifications: 


l 1Ghz Dual-core Processor (NVIDIA Tegra 2) 
l 4-inch WVGA screen 
l 8GB memory (up to 32GB via microSD) 
l 1,500 mAh battery 
l 8 megapixel rear camera and 1.3 megapixel front camera 
l HDMI mirroring 
l 1080p MPEG-4/H.264 playback and recording


நாம் எதைச் செய்கின்றோமோ அதையே திரும்பச் செய்யும் குணம் கொண்டவர்கள் குழந்தைகள்.

நன்மை தீமை அறியாதவர்கள். சிறு வயதில் அவர்கள் அறியாமல் செய்யும் தவறை திருத்த வேண்டியது மூத்தோரின் கடமை.

ஆனால் மெக்ஸிகோவைச் சேர்ந்த 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சுமார் 30-40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் இணைந்து பட்டப்பகலில் நகைக்கடைஒன்றில் களவாடியுள்ளான்.

அச்சிறுவனும் பெண்ணும் நகைக்கடையொன்றினுள் நுழைகின்றனர்.

அப்பெண்மணி கடை ஊழியர்களுடன் உரையாடி அவர்களது கவனத்தினை வேறு திசைக்குத் திருப்புகின்றாள்.

அத்தருணத்தில் அச் சிறுவன் கடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஆபரணங்களை மிகவும் இலாவகமாக திருடுகின்றான்.

இக்காட்சிகள் அனைத்தும் பாதுகாப்பு கமெராக்களில் அப்படியே பதிவாகியுள்ளன.

திருடி முடித்த பின்னர் அப்பெண்மணி தனது காரினை தவறான இடத்தில் நிறுத்துவைத்துவிட்டதாகவும் உடனே அதனை சரியான இடத்தில் நிறுத்தி விட்டு திரும்புவதாகவும் கூறிச் சென்றுள்ளார்.

எனினும் அவர்கள் திரும்பி வரவில்லையெனவும் அச்சிறுவன் குறும்புத்தனம் மிக்கவன் என்று மட்டுமே தான் நினைத்ததாகவும் கடை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட அப்பொருட்களின் பெறுமதி சுமார் 400 அமெரிக்கடொலர்களாகும்.

அச்சிறுவன் திருடும் விதத்தினை நீங்களும் பாருங்களேன்.

15 டிசம்பர் 2010

                  
                                          

துன்பமிகுதியால் வடியும் கண்ணீரை இரத்தக் கண்ணீர் என சொல்வது வழக்கம்.

ஆனால் அமெரிக்க டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த என்ற 17 வயதான கல்வினோ இன்மான் என்ற வாலிபனின் கண்கள் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிகின்றது.

எனினும் இது துன்ப மிகுதியால் அல்ல.

இது ஒரு நோய் என கூறப்பட்டாலும் இதனை கண்டறிய வைத்தியர்கள் தடுமாறி வருகின்றனர்.

சிலவேளைகளில் தனக்கு இரத்தக்கண்ணீர் வடியும் போது கண்களில் எரிச்சல் ஏற்படுமெனவும் சில வேளைகளில் வடிவதே தெரியாது எனவும் அந்த வாலிபன் தெரிவிகின்றான்.

அது தொடர்பான காணொளியை நீங்களும் பாருங்கள்.


              

கிறிஸ்மஸ் தீவிற்கு சுமார் 70 அகதிகளுடன் பயணித்த இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த மீன்பிடிப்படகொன்று பாறைகளில் மோதி கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த பலர் உரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது,

புகலிடம் கோரிச் சென்ற இப்பயணிகளில் சிறுகுழந்தைகள் முதல் பெண்களும் அடக்கம்.

இந்தப் படகானது கடும் அலைகள் மற்றும் காற்றின் காரணமாக பாறைகளுடன் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து படகு கட்டுப்பாட்டை இழந்துள்ளதுடன் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது.

அந் நாட்டு கடற்படையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 15 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சுமார் 30 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படகில் இருந்தவர்களில் அநேகமானோர் ஈராக் மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.


                                      

பிரான்ஸ் நாட்டில் 1610 ஆண்டு கொலை செய்யப்பட்ட ஹென்றி IV மன்னரின் தலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தத் தலை இதுவரை காலமும் பதனிட்டு வைக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 9 மாதகால ஆராய்ச்சியின் பின்னர் இத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

400 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதற்கென மரபணு சோதனை, அங்க அடையாளங்கள் மற்றும் மானிடவியல், தடவியல், கதிர்த்தாக்கம் உட்பட நோய்கள் தொடர்பான ஆய்வு (anthropological, paleopathological, radiological, forensic)ஆகியவற்றை துல்லியமாக மேற்கொண்டுள்ளனர்.


குறிப்பாக மூக்கில் காணப்பட்ட ஓர் அடையாளம் மற்றும் காதில் தோடு அணியப்பட்டமைக்கான அடையாளம், கொலை முயற்சி ஒன்றின் போது முகத்தில் ஏற்பட்ட காயம் ஆகியவை இவற்றில் முக்கியமானவையாகும்.
இத்தலையின் தற்போதைய பதப்படுத்தப்பட்ட ( Mummified) தோற்றம்.ஹென்றி IV

ஹென்றி ஐஏ மன்னர் அக்காலத்தில் மிகவும் புகழ்பூத்த நல்லாட்சி புரிந்த மன்னர்களில் ஒருவராவார். இவரது கம்பீர தோற்றம் காரணமாகவும் பெண்களால் அதிகம் நேசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர் 1610 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பாரிஸில் வைத்து பிரன்கொயிஸ் ரவ்யிலக் என்பவரால் கொலைசெய்யப்பட்டார்.

இவரது தலை மாத்திரம் 1793 ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது காணமல் போனபோதும் புரட்சியின் போது போராட்டக்காரர்களால் இவரது தலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்தத் தலை பலரிடம் கைமாறியதாகக் கூறப்பட்டது.

எனினும் 400 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.