Blogger இயக்குவது.
Loading...

Labels

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Followers

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Sociable

Blog Archive

இந்த வலைப்பதிவில் தேடு

28 அக்டோபர் 2010


உலகின் அதி வேக சுப்பர் கணினியை ( Super Computer ) கொண்ட நாடு என்ற பெருமையை சீனா நேற்று பெற்றுக்கொண்டது.

டியானி ( Tianhe ) - 1 A என அழைக்கப்படும் கணினியே அது. இதன் வேகம் 2.507 பெடாப்லொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாகும்.

இது மற்றைய சுப்பர் கணினிகளைவிட 43 வீதம் வேகம் கூடியது.                            
இக்கணினியானது சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான மொத்த செலவு 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள். சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோற்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது.

இக்கணினி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் ( CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) கொண்டுள்ளது.

முதன் முறையாக 2009 ஆம் ஆண்டு இக்கணினி உருவாக்கப்பட்டது. அதன்போது இது உலகின் 5 ஆவது வேக கணினி என்ற பெருமையை மட்டுமே கொண்டிருந்தது.

ஆனால் தற்போது இது நன்கு மேம்படுத்தப்பட்டதையடுத்து உலகின் 'அதிவேக கணினி' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இதுவரை அமெரிக்காவின் கிரேஸி எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணினியாக இருந்து வந்தது. இது 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டது. இதன் வேகம் 1.75 பெடாப்லொப்ஸ் (Petaflops) ஆகும்.

எனினும் சீனா அதனை டியானி ( Tianhe ) - 1 A மூலம் முறியடித்துள்ளது.

                                        பிரபல இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனமான சொனி பிளேஸ்டேசன் போன் (Playstation Phone) எனும் நவீன கையடக்கத்தொலைபேசியினை தயாரித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

பி.எஸ்.பி (PSP- PlayStation Portable) என்பது சொனி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கையடக்க கேமிங் ( Gaming ) சாதனமாகும்.

இதைப்போன்ற கேமிங் அனுபவத்தினை தரக்கூடியதும் கேமிங்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதுமான கையடக்கத் தொலைபேசியினை சொனி இரகசியமாக தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனுடன் நவீன கையடக்கத்தொலைபேசியின் பண்பையும் இது கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சொனி மற்றும் எரிக்ஸன் நிறுவனங்களின் ' சொனிஎரிக்சன்' தயாரிப்பாகவே இது வெளியாகவுள்ளது.

இது கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை (Android OS) கொண்டு இயங்கவுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்

1) 1GHz Qualcomm MSM8655 processor
2) 512MB RAM,
3) 1GB ROM,
4) 3.7 to 4.1 inches tough screen

மேலும் கேம் விளையாடுவதற்கு ஏதுவான கீபேட்களும் இணைக்கப்படவுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.


இவ்வுபகரணமானது 2011 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 அக்டோபர் 2010

 உலகின் அதிவேக ரயிலை சீனா நேற்று அறிமுகம் செய்தது. 

CRH 380 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலானது இதற்கு முன்னைய அதிவேக ரயிலான CRH2 ரயிலின் வேகத்தினை முறியடித்துள்ளது. 

சீனாவின் இருமுக்கிய வர்த்தக நகரங்களான ஷங்காய் மற்றும் ஹாங்சூ நகரங்களையே மேற்படி அதிகவேக ரயில் சேவை இணைக்கின்றது.

இவ்விரு நகரங்களுக்குமிடையிலான சுமார் 200 கிலோமீற்றர் தூரத்தினை இவ் ரயிலானது 45 நிமிடங்களில் அடைகின்றது.

இதன் சராசரி வேகம் மணித்தியாலத்திற்கு 350 கிலோ மீற்றர்களாகும்.

இதன் உச்ச வேகம் மணித்தியாலத்திற்கு 420 கிலோ மீற்றர்களாகும். எனினும் இதன் உச்ச வேகத்தில் இது பயணிக்காதெனவும் சராசரி வேகத்திலேயே பயணிக்குமெனவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது முற்றுமுழுதாக சீனாவின் தயாரிப்பாகும்.

எனினும் சீனாவானது மணித்தியாலத்திற்கு 500 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய ரயிலினை உருவாக்க உத்தேசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.                                                              
              

மின்னஞ்சல் சேவைகளில் முன்னோடியான யாஹூ மெயில் சேவையானது பல நவீன வசதிகளுடன் தற்போது வெளிவந்துள்ளது.

பல நவீன மாற்றங்களுடன் யாஹூ மெயில் வெளியாகவுள்ளது என்ற செய்தியை நாம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியிருந்தோம்.

2005 ஆம் ஆண்டின் பின்னர் தனது 279 மில்லியன் பாவனையாளர்களுக்காக யாஹூ மேற்கொண்டுள்ள பாரிய மாற்றம் இதுவாகும்.

சமூக வலைப்பின்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் வசதிகளானவை:

அதிவேகமான செயற்பாடு - ஜீ மெயில் மற்றும் ஹொட்மெயில் சேவையினை விடவும் முன்னரை விட இருமடங்கு வேகத்திலும் இயங்குமென யாஹூ உத்தரவாதமளிக்கின்றது.

சமூகவலைப்பின்னல் தொடர்பு- யாஹூ மெயிலில் இருந்தவாறே பேஸ்புக் மற்றும் டுவிடரில் அப்டேடிங் செய்யும் வசதி. மேலதிகமாக உடனடி மேசேஜிங் IM ( Instant messaging ) மற்றும் குறுந்தகவல் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்பொக்ஸில் இருந்தவாறே படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்வையிடல் - இன்பொக்ஸில் இருந்தவாறே பிக்காஸா (Picasa) பிளிக்கர் (Flickr) மற்றும் யூடியூப் (YouTube) இணையத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடும் வசதி.

இலகுவாக மின்னஞ்சல்களைத் தேடுதல் - பாவனையாளர் தனக்குத்தேவையான மற்றும் முக்கியமான மின்னஞ்சல்களைத் தேடும் வசதி. திகதி, அனுப்பியவர், கோப்புக்கள் ( Attachment ) ஆகியவற்றின் அடிப்படையில் மின்னஞ்சல்களை தேடிப்பெற முடியும்.

ஸ்பேம்களில் இருந்து பாதுகாப்பு - ஸ்பேம்களில் இருந்து உச்ச பாதுகாப்பு அளிக்கின்றது.

கூகுள், மைக்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக யாஹூ சற்று பின் தள்ளப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இத்தகைய மாற்றங்களினூடாக அது இழந்த தன் இடத்தினை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

26 அக்டோபர் 2010

  
இந்தியாவில் பிரபல மலிவுவிலை கையடக்கத் தொலைபேசிகளைத் தயாரித்து வரும் 'ஸ்பைஸ்' மொபைல் நிறுவனம் 97 அமெரிக்க டொலர் பெறுமதியில் முப்பரிமாண திரையைக் கொண்ட 3D கைத்தொலைபேசியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

M - 67 எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கையடக்கத் தொலைபேசியானது பலரினது எதிர்ப்பார்ப்பையும் தூண்டிவிட்டுள்ளது. 

இதன் பெறுமதி இந்திய மதிப்பின்படி வெறும் 4,299 ரூபா மட்டுமே.

மேலும் முப்பரிமாண தன்மையினை அனுபவிக்க கண்ணாடி அணிய தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.

2 சிம்கள் உபயோகிக்கக்கூடிய வசதியையும் இதுகொண்டுள்ளது.

2 மெகாபிக்ஸல் கெமரா, 16 ஜி.பி வரை அதிகரிக்கக்கூடிய மெமரி என்பன கூடுதல் வசதிகளாகும்.

4 சிம் வசதி கொண்ட கைத்தொலைபேசி 
              
ஒடெக் (Otech) எனும் நிறுவனம் 4 சிம் வசதிகளைக் கொண்ட கைத்தொலைபேசி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இக்கைத்தொலைபேசியானது தொடுதிரை, 3G வசதி மற்றும் 12.1 மெகாபிக்ஸல் கெமரா வசதி ஆகியவற்றைக்கொண்டுள்ளது. _

25 அக்டோபர் 2010

                     
விண்டோஸ் 8 இயங்குதளமானது ( Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.

அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் ( Mac OS X 10.7 Lion ) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.

மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் ( App Store ) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.

மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7( Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்( kinect ) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

21 அக்டோபர் 2010

                 

கூகுள் குரோம் இயங்குதளத்தின்( Browser) 7 ஆவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வியங்கு தளமானது மெக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்கு தளங்களுக்கு (Operating System) இயங்கக் கூடியதாகும்.

இது தொடர்பாக அதன் வலைப்பூவில் (Blog) அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய பதிப்பில் காணப்பட்ட நூற்றுக்கான பிழைகளைத் திருத்தியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.

மேலும் சிறப்பாக இயங்கக் கூடிய HTML 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக குரோம் பாவனையாளர்கள் தானாக 'அப்டேட்'களைப் பெறுவதுண்டு.

கூகுளின் தரவிறக்கம் செய்யும் பக்கத்திலிருந்து அதனை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

20 அக்டோபர் 2010


வருடத்தின் இறுதியில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகளின் ஆய்வுறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

கடந்த 5 வருடங்களில் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதாவது 2 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.

226 மில்லியன் பேர் புதிதாக இவ்வருடத்தில் இணையத்தைப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர்களில் அநேகர் வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேற்படி அறிக்கையின் படி வருட இறுதியில் மேலைத்தேய நாடுகளின் சனத்தொலையில் 71 % இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள்.

மேலும் மொபைல் இணையம் மற்றும் புரோட்பேன்ட் (Broadband) ஆகியன வேகமாக வளர்ந்துவருவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உந்துதலாக உள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

அவ்வறிக்கையினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

DOWNLOAD THE REPORT HERE.

19 அக்டோபர் 2010உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லையிட் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியினை எல்.ஜி கடந்தவாரம் கொரியாவில் வெளியிட்டது.

72LEX9 என இம் மாதிரி பெயரிடப்பட்டுள்ளது.

இது 72 அங்குல திரையைக் கொண்டுள்ளது.

இதுவே உலகில் தற்போது வணிகரீதியாக விற்பனைசெய்யப்படும் மிகப் பெரிய திரையைக்கொண்டுள்ள பெக்லையிட் எல்.இ.டி (LED) முப்பரிமாண தொலைக்காட்சி ஆகும்.


தற்போது கொரியாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இத்தொலைக்காட்சியானது அடுத்த ஆண்டளவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்குவருமென தெரிவிக்கப்படுகின்றது.


உலகிலேயே மிகப்பெரிய முப்பரிமாண தொலைக்காட்சியாக கருதப்படுவது மிட்சுபிஸி நிறுவனத்தின் Diamond WD-82838 ஆகும்.


இதன் தொழிநுட்ப அம்சங்களாவன்.

1) 480Hz TruMotion panel
2) Full LED backlight
3)10,000,000:1 contrast ratio,
4) Wireless AV link and DLNA.
5) 4 HDMI ports
6) 1 USB
7) YouTube and Google Picasa support

உலகிலேயே மிகப்பெரிய முப்பரிமாண தொலைக்காட்சியாக கருதப்படுவது மிட்சுபிஸி நிறுவனத்தின் Diamond WD-82838 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

18 அக்டோபர் 2010

                                                   
'ரோபோடிக்' துறையில் பாரிய அறிவற்றவர்களால் கூட 'ஹியூமனொயிட்' (humanoid) என்றழைக்கப்படும் மனிதனைப் போன்ற ரோபோக்களை இயக்கக்கூடிய மென்பொருளைத் தாம் உருவாக்கியுள்ளதாக ஜப்பானின் பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது.

' கொரோனொயிட் ' ( Choreonoid ) என்றழைக்கப்படும் இம்மென்பொருளை 'ரோபோடிக் புரோகிராமிங்' அறிவற்றவர்கள் கூட உபயோகிக்க முடியும்.

உதாரணமாகச் சாதாரண 'கிரஃபிக் டிசைனர்' ஒருவராலேயே இம்மென்பொருளைக் கட்டுப்படுத்தமுடியும்.

கணினி மவுசின் ( Mouse ) உதவியுடன் ரோபோவின் அங்க அசைவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் இதன் மூலம் ரோபோவை பாய்தல், குதித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்விக்க முடிவதுடன், அதற்கு ஏற்பட்ட அதிர்வுகளையும் கணக்கிட முடியும்.

நமது பிரயோகங்கள் தவறெனில் இம்மென்பொருள் அதனைக் கட்டுப்படுத்தவும் தவறுவதில்லை.

இது 'ரோபோடிக்' துறையில் புதிய புரட்சியாகக் கருதப்படுகின்றது.
அம்மென்பொருளின் மூலம் இயக்கப்படும் 'ஹியூமனொயிட் ரோபோ' தொடர்பிலான காணொளி :

15 அக்டோபர் 2010பேஸ்புக் மற்றும் ஸ்கைப் இணைவு தொடர்பான செய்தியை உத்தியோகபற்றற்ற நிலையில் வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப்' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.

இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்

மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ் ( Comments) செய்யவும் முடியும்.

இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.


Download Skype 5.0 hereஸ்கைப் 5.0 செயற்பாடு தொடர்பான காணொளி

14 அக்டோபர் 2010


சர்ச்சைகளின் உறைவிடமாகிவிட்டது பேஸ்புக். எனினும் புதுப்புது வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் பேஸ்புக் தவறவில்லை.

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password).

பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம்.

இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும்.

உங்கள் கைத்தொலைபேசிகளில் 'otp' என டைப் செய்து 32665 என்ற இலக்கத்திற்கு அனுபினால் உங்களுக்கான கடவுச்சொல் கிடைக்கப்பெறும்.

இதனை ஒரு தடவை மற்றும் 20 நிமிடங்கள் வரையே பயன்படுத்தமுடியும். இதனால் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படுகின்றது.

கடந்தவாரம் பேஸ்புக் ' ரிமோட் லொக் அவுட்' வசதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இன்னும் சில நாட்களில் இவ்வசதியை அனைவரும் பெறக்கூடியதாகவிருக்கும்.

13 அக்டோபர் 2010


நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடைவடிவமைப்பாளர் ஒருவர் தனது புதிய ஆடை வடிவமைப்புடன் தொழில்நுட்பத்தினையும் இணைத்து நவீன ஆடையொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார்.


இவரது இந்ந ஆடையில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக நிறச்சாயங்கள் செலுத்தப்படுகின்றன. இவ்வாடை ' பிசியூடோமோர்ப் ' என அழைக்கப்படுகின்றது.


' பிசியூடோமோர்ப் ' இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. உடம்புப்பகுதி வெள்ளை நிறத்தால் ஆனது. மற்றைய பகுதி மெல்லிய குழாய்களினால் ஆனது.


இவ்வாடையின் கழுத்துப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் நிறச் சாயங்கள் ஆடைகளுக்குச் செலுத்தப்படுகின்றன. இச்சாயங்களின் மூலம் ஆடை, பலவித நிறங்களில் தோற்றமளிக்கின்றது.


இதனைக் கட்டுப்படுத்தும் இலத்திரனியல் சேர்க்கிட் 9 வோல்ட் மின்கலங்களால் வலுவூட்டப்படுகின்றன.


நிறச்சாயங்கள் தன்னிச்சையாக ஆடைகளின் மீது செலுத்தப்படுவதால் புதுவிதமான டிசைன்களில் ஆடைகள் காணப்படுவதாக இதனை உருவாக்கியுள்ள 'அனொவுக் விப்ரச்ட்' தெரிவிக்கின்றார்.

நவீன் ஆடை இயக்கப்படும் முறையினை இக் காணொளியில் காணமுடியும்.


12 அக்டோபர் 2010


சமூகவலைப் பின்னல் தளங்களில் அதிக நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள் மலேசியர்கள் எனவும் குறைவாகக் கொண்டிருப்பவர்கள் ஜப்பானியர்கள் எனவும் புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

மேலும் ஈ-மெயில் பாவனையானது காலங்கடந்து விட்டதாகவும் அவ்வாய்வு தெரிவிக்கின்றது.

பிரித்தானியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று சுமார் 46 நாடுகளில் 50,000 பேரிடம் மேற்படி ஆய்வினை நடத்தியிருந்தது.

இவ்வாய்வின் முடிவுகளின் படி இணையப் பாவனையாளர்களில் அதிகமானோர் மின்னஞ்சல் பாவனையைவிட 'பேஸ்புக்' மற்றும் 'லிங்டின்' போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் வெகு நேரத்தைச் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் லத்தீன் அமெரிக்கா, மத்தியகிழக்கு, சீனா போன்ற நாடுகளில் சமூக வலைப் பின்னல்கள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ள போதிலும் அங்கே கணிசமானோர் மின்னஞ்சலை உபயோகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியர்கள் சராசரியாக 233 மற்றும் பிரேஸிலியர்கள் 231 நண்பர்களையும் சமூகவலைப் பின்னல் தளங்களில் கொண்டுள்ளனர். ஜப்பானியர்கள் சாராசரியாக 29 நண்பர்களைக் கொண்டுள்ளனர்.

சீனாவில் இணையப் பாவனையாளர்களில் ஐந்தில் ஒருவர் அதாவது 88 % மற்றும் பிரேஸிலியர்களில் 51 % வலைப்பதிவில் எழுதுகின்றனர். இது அமெரிக்காவை விட 32 % அதிகமாகும்.

இது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி ஆகியவற்றின் பாவனை வெகுவாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைத்தொலைபேசிகளின் மூலம் சமூகவலைப் பின்னலை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11 அக்டோபர் 2010


கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது.

சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை ( Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.

காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது.

இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன.

இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது.

கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இக்கார்களுக்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


08 அக்டோபர் 2010


கூகுளின் குரோம் இயங்குதளமானது அசுரவேகத்தில் வளர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இயங்குதளமானது தனது ஆதிக்கத்தினை தொடர்ந்து இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அதன் பாவனை வீதம் 50 % குறைவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டளவில் இது 83% இயங்குதள சந்தையை கொண்டிருந்தது.

ஃபயர்பொக்ஸ் இயங்குதளம் ஏற்ற இறக்கங்கள் இன்றி தனது இடத்தினை தக்கவைத்துள்ளது.

2008 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கூகுள் குரோமானது இண்டர் நெட் எக்ஸ்புளோரரை வேகமாக முந்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இண்டர் நெட் எக்ஸ்புளோரர் தனது 9 ஆவது தொகுப்பினையே பெரிதும் நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குரோமின் வளர்ச்சியானது பயர்பொக்ஸினையும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேவையேன்பதிற்கு அப்பால் இயங்குதளங்கள் பெரிய வர்த்தக நடவடிக்கையென்பது குறிப்பிடத்தக்கது.

07 அக்டோபர் 2010பேஸ்புக் பாவனையாளர்கள் அனைவரும் அதிக அக்கறை கொள்ளும் விடயம் ' ப்ரைவசி' ஆகும். நாம் பொதுவாக விடயங்களை, தகவல்களை அல்லது புகைப்படத்தினை நமது பேஸ்புக் நண்பர்களிடையே பகிர்கின்றோம்.

எனினும் குறிப்பிட்ட சில செயற்பாடுகளைக் குறித்த சிலரிடையே மட்டும் பகிர விரும்புவதுண்டு. இவ் விடயத்தினை கருத்திற் கொண்டு புதிய ' குரூப்ஸ் ' வசதியினை பேஸ்புக் வழங்கியுள்ளது.

ஏற்கனவே பேஸ்புக்கில் இது போன்றதொரு வசதி உள்ள போதிலும் 5 % குறைவான பாவனையாளர்களே இதனை உபயோகிப்பதாகவும் ஆனால் இவ்வசதியானது பல பாவனையாளர்களால் உபயோகிக்கப்படுமெனவும் அதன் நிறுவுனர் ஸுக்கர் பேர்க் தெரிவிக்கின்றார்.

தற்போது இவ்வசதியின் மூலம் நீங்கள் விரும்பிய சிலரிடையே மட்டும், அதாவது விருப்பமான குழுவினரிடையே மட்டும் தகவல்களைப் பகிரலாம்.

இதன் மூலம் நண்பர் வட்டத்தினிடையே, குடும்ப உறுப்பினர்களிடையே தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்ளமுடியும்.

மேலும் அக் குழுவினரிடையே 'சாட்டிங்' , குரூப் 'மெசேஜிங்' மற்றும் குரூப் 'மெயிலிங்' வசதிகளும் இதில் உள்ளன.

இதன் மூலம் பாதுகாப்பாக விடயங்கள் பகிரப்படுவதோடு நமது ' ப்ரைவசி' மேலும் பாதுகாக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

06 அக்டோபர் 2010


' கெட்ஜார் ' மற்றும் 'க்ளு' மொபைல் என்பன கைத்தொலைபேசி மென்பொருள் தரவிறக்கத்தளம் (அப்ளிகேசன் ஸ்டோர்) மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான வீடியோ கேம்ஸ் வெளியீட்டு நிறுவனங்கள் ஆகும்.

தற்போது இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இலவசமாக கையடக்கத் தொலைபேசிகளுக்கான கேம்ஸ்களை தரவிறக்கம் செய்யும் வசதியினை தங்கள் பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

இவ்வசதியானது இரு வாரங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அண்ரோயிட்டினை தளமாக கொண்டியங்கும் கையடக்கத் தொலைபேசிகள், ஐ-போன், பிளக்பெரிகள் உட்பட அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

பிரெய்ன் ஜீனியஸ் 2 , மிஸ்ட்ரீஸ் ஒப் டயிம், பில்ட்ட லொட், ரேஸ் ட்ரய்வர் கிரிட் ஆகிய பிரபல கேம்ஸ்கள் இதில் உள்ளடங்குகின்றன.

பொதுவாக இவற்றின் விலை சுமார் ஒன்று முதல் 5 அமெரிக்க டொலராகும்.

அவர்களில் உத்தியோகபூர்வ இணையத்தளமான இல்www.getjar.com/mobile-allgames கேம்களை தரவிறக்கம்செய்து கொள்ளமுடியும்.

04 அக்டோபர் 2010
கூகுளின் சேவைகளின் ஒன்றான கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ' ( Google street view ) பல நாடுகளில் சர்ச்சைக்குள்ளானதும் , பலரால் வரவேற்கப்படுவதுமான ஒரு சேவையாகும். இது தற்போது அண்டார்டிக்கா கண்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ' என்பது உலக நகர வீதிகளின் அமைவிடங்களைப் புகைப்படங்களாகக் காண்பிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.

2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை, தற்போது 25 நாடுகளைக் கொண்டுள்ளது.

மேற்படி சேவையானது உலகின் பெரும்பாலான முன்னணி மற்றும் பின்தங்கிய நகரங்களின் புகைப்படங்களைக் காண்பிக்கின்றது. இவற்றுள் நகர வீதிகள் , வீடுகள், வியாபார ஸ்தாபனங்களின் அமைவிடங்கள் போன்றவை அடங்குகின்றன.

தற்போது இச்சேவையானது அண்டார்டிக்கா கண்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அச்சேவை உலகின் 7 கண்டங்களையும் உள்ளடக்குகின்றது.

தற்போதைக்கு சேவை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுமெனவும் பிறகு விஸ்தரிக்கப்படுமெனவும் கூகுள் அறிவித்துள்ளது.