மற்றுமொரு சமூக வலைப்பின்னல்: திறந்த மனம் படைத்தவர்களுக்கு மட்டும்



                                          




சமூக வலைப்பின்னல்களின் தாக்கம் மற்றும் அதன் மீதான ஈர்ப்பு தினமும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் இவ்வலையமைப்புகளை உருவாக்குவதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

நேற்றைய நமது செய்தியும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் மீ என்ற சமூக வலையமைப்பினை பற்றியதாகும்.

இந்நிலையில் இன்றைய செய்தியும் சமூகவலைப்பின்னல் ஒன்றினைப் பற்றியதே. 

ஆம், பேஸ்புக் வலையமைப்பின் ஸ்தபகர்களில் ஒருவரான கிறிஸ் ஹகஸ் என்பவரால் 'ஜூமோ' http://www.jumo.comஎன்ற சமூக வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 


                                           

இதன் சிறப்பம்சம் யாதெனில் மற்றைய சமூகவலையமைப்புகளைப் போல் பொழுதுபோக்கு அம்சங்களை அடிப்படையாகக்கொள்ளாமல் சமூக நலன், பிரச்சினைகள், அதற்கான தீர்வு ஆகியவை தொடர்பில் இவ்வலையமைப்பு ஆராய்கின்றது. 


இவ்வலையமைப்பில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடும் இலாபநோக்கற்ற சுமார் 3ஆயிரம் அமைப்புக்கள் தங்களை பதிவுசெய்துள்ளன. இவற்றைப் பின்தொடர்வது மட்டுமல்லாமல் உதவிகளையும் வழங்கமுடியும். 

பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், எச்,ஐ.வி, குடிநீர்தொடர்பான பிரச்சினை, சுகாதார சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைகள், கல்விசார் பிரச்சினைகள், காலநிலை தொடர்பான பல்வேறு விடயங்கள் இவ்வலையமைப்பின் ஊடாக ஆராயப்படுகின்றன. 



இதன் முக்கிய குறிக்கோள்களாக குறிப்பிடப்படுவன


- Find isues and projects you care about
- Follow the latest news and update
- Support their work with your time, money, and skills 


மேலும் உறுதிப்படுத்தப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்புகள் ஜூமோவில் தங்களை பதிவுசெய்துகொள்ளவும் முடியும். 

பேஸ்புக் கணக்கினை கொண்டிருப்பவர்கள் இதில் தற்போது இணைந்து கொள்ளமுடியும்.


                       

கருத்துகள்

கருத்துரையிடுக