கொக்கா-கோலா தயாரிப்பின் பரம இரகசியம் அம்பலமாகியது

இதுவரை காலமும் பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் கொக்கா-கோலா பானத்தின் மூலப் பொருள்கள் எவையென்ற ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்க வானொலி நிலையமொன்று தெரிவித்துள்ளது.

கொக்கா- கோலாவின் தயாரிப்பு மற்றும் அதன் மூலப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகளாக இரகசியமாக பேணப்பட்டு வருகின்றது.

அந்நிறுவனத்தின் தகவல்களின் படி 1979 பெப்ரவரி 8 ஆம் திகதி வெளியாகிய 'அட்லாண்டா ஜேர்னல் கொண்ஸ்டியுசன்' என்ற பத்திரிக்கையில் நபர் ஒருவர் புத்தகமொன்றினை திறந்தவாறு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 







அப்புத்தகத்தில் கொக்கா-கோலா தயாரிக்க தேவையான மூலப்பொருள் மற்றும் சரியான அளவீடுகள் ஆகியவை குறிப்படப்பட்டுள்ளதாக குறித்த ஊடக நிறுவனம் அப்படத்தினை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளதுடன் இது கொக்கா-கோலாவை உருவாக்கியவரான ஜோன் பெம்பர்டன்னினுடைய குறிப்பின் நகல் எனவும் கூறுகின்றது.

இந்த பானத்தின் தயாரிப்பில் "Merchandise 7X" எனப்படும் 7 வகை திரவியங்களின் பங்கே முக்கியமாக கருதப்படுவதாகவும் இவையே கொக்கா-கோலாவிற்கே உரிய சுவையைத் தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை மஸிசிப்பியைச் சேர்ந்த நபர் ஒருவர் 1969 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கா-கோலா நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்றினையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. 







அக் கடிதத்தில்கொக்கா-கோலாவின் தயாரிப்பு முறையை கண்டறிந்துள்ளதாகவும் அது தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அந்த நபரின் கண்டுபிடிப்பிற்கும் பத்திரிகையில் வெளியாகிய தகவல்களும் பெரும்பாலும் ஒத்துப்போவதாக அந் நிறுவனம் குறிப்பிடுகின்றது. 

கொக்கா-கோலா தயாரிப்பு முறை மற்றும் மூலகங்கள் தொடர்பான தகவல்களானது அமெரிக்க வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே. 

The secret recipe 

Fluid extract of Coca 3 drams USP
Citric acid 3 oz
Caffeine 1oz
Sugar 30 (it is unclear from the markings what quantity is required)
Water 2.5 gal
Lime juice 2 pints 1 qrt
Vanilla 1oz
Caramel 1.5oz or more to colour


7X flavour (use 2oz of flavour to 5 gals syrup):

Alcohol 8oz
Orange oil 20 drops
Lemon oil 30 drops 
Nutmeg oil 10 drops
Coriander 5 drops
Neroli 10 drops
Cinnamon 10 drops

கருத்துகள்

  1. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! .
    நறுக்குனு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

    Remove word verification..

    பதிலளிநீக்கு
  3. தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி . நீங்கள் கூறியவறே வாக்களித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக