கிறிஸ்மஸ் தீவிற்கு 70 அகதிகளுடன் பயணித்த கப்பல் கடலில் விபத்து (காணொளி இணைப்பு)

              

கிறிஸ்மஸ் தீவிற்கு சுமார் 70 அகதிகளுடன் பயணித்த இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த மீன்பிடிப்படகொன்று பாறைகளில் மோதி கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த பலர் உரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது,

புகலிடம் கோரிச் சென்ற இப்பயணிகளில் சிறுகுழந்தைகள் முதல் பெண்களும் அடக்கம்.

இந்தப் படகானது கடும் அலைகள் மற்றும் காற்றின் காரணமாக பாறைகளுடன் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து படகு கட்டுப்பாட்டை இழந்துள்ளதுடன் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது.

அந் நாட்டு கடற்படையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 15 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சுமார் 30 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படகில் இருந்தவர்களில் அநேகமானோர் ஈராக் மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.


கருத்துகள்