எஜமானைக் கொன்ற சண்டைச் சேவல்: மேற்கு வங்கத்தில் சம்பவம்








இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த சிங்ராய் சோரன் என்ற நபர் தான் வளர்த்த சேவலின் தாக்குதலுக்கு உள்ளாகி கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.

இவர் சேவல் சண்டை பந்தயங்களில் தனது சேவலினை போட்டியிடச் செய்பவராவார்.

அன்றைய தினம் இவர் போடிகளில் தனது சேவலினை இடைவிடாது போட்டியிடச் செய்துள்ளார்.

எனினும் அவரது சேவல் களத்திலிருந்து பல தடவை வெளியே வந்துள்ளது.

இதனை பொருட்படுத்தாமல் மீண்டும் அந்நபர் சேவலை போட்டியில் ஈடுபடுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சேவல் தனது எஜமானை தாக்கியுள்ளது.

அதன் கால்களில் பொருத்தப்பட்டிருந்த கூர்மையான சவர அலகினால் அவரின் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.

பொதுவாக இத்தகைய பந்தயங்களின் போது சேவல்களுக்கு போட்டிகளுக்கிடையே 1 மணித்தியாலய ஓய்வு வழங்கப்பட வேண்டும் என பந்தயங்களில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சேவலை பொலிஸார் தற்போது தேடிவருகின்றனர்.

எனினும் இதனை கண்டு பிடிப்பது சாத்தியமில்லையெனவும் வேறு எவறேனும் அச் சேவலை தங்களது பந்தயங்களுக்காக மறைத்து வைத்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்

கருத்துகள்

கருத்துரையிடுக