பல ஆண்டுக் கனவு நனவாகிறது: சஹாரா வனத்திட்டம் ( பட இணைப்பு)





பச்சைவீட்டுத் திட்டத்தின் மூலம் பாலைவனங்களில்  சுத்தமான குடிநீர், உணவு, எரிபொருள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு முன்னோடியான சஹாரா வனத் திட்டமானது அதன் பரீட்சாத்த நடவடிக்கைகளை ஜோர்தானின் செங்கடல் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள பாலைவனங்களில் விரைவில் ஆரம்பிகவுள்ளது.

விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களின் பல ஆண்டு வினைத்திறன் மிக்க உழைப்பு மற்றும் சரியான திட்டமிடல் ஆகியவற்றாலேயே இது சாத்தியமாகியுள்ளது.

மேற்படி திட்டமானது பாலைவனங்களை பசுமையாக மாற்றுவதுடன் காபனீரொக்சைட் வாயுவை உறிஞ்சி பூகோள காலநிலை மாற்றத்தினையும் கட்டுபடுத்தக்கூடியது.


உலகில் தாராளமாக காணப்படும் சூரிய ஒளி, கடல் நீர், காபனீரொக்சைட் வாயு, செழிப்பற்ற நிலம் போன்றவற்றை பயன்படுத்தி பச்சை வீட்டுத்திட்டத்தின் மூலம் தொடர்ச்சியான உணவு, குடிநீர் மற்றும் மீள சக்தியாக மாற்றுதலே இதன் பிரதான நோக்கமென இத்திட்டத்தின் நிறைவேற்று இயக்குனர் ஜோகிம் ஹக் தெரிவிக்கின்றார்.


இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயற்பாடு.




இது 2 தொழிநுட்பங்களை ஒன்றாக இணைக்கின்றது.

சூரிய ஒளி சக்தியினையும்,கடல் நீரை சுத்தமான நீராக மாற்றியும் தாவரங்கள் வளரக்கூடிய பச்சைவீடுத்திட்டமுமே இவையாகும்.




கடல்நீர் பச்சைவீட்டு விளைவு

இப்படத்தில் காட்டப்பட்டவாறு பச்சைவீட்டினுள் செலுத்தப்படும் வளியானது கடல் நீரினால் குளிர்விக்கப்படுவதோடு, சூடாக்கவும் படுகின்றது. இச்சூடு மற்றும் வளியானது பச்சைவீட்டினுள் வளரும் தாவரங்களை செழுமையாக்குகின்றது. பின்னர் அது ஆவியாக்கியின் மூலம் சூரிய வெப்பத்தினால் சூடாக்கப்படும் கடல் நீர் பாயும் இடத்தினை அடைகின்றது இங்கு அச்சூடான வளியானது குளிரான கடல் நீர் கொண்ட குழாயினை சந்திக்கிறது. இத்ஹனால் புதிய நீரானது அக் குழாய்களின் வெளியே நீராவித்துளிகளாக பெறப்படும்.


வெப்பக் காற்றின் 10 முதல் 15 வீதம் வரையிலானவையே இவ்வாறு புதிய நீராக பெறப்படும்.



சூரிய சக்தி தொழில்நுட்பம்


இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் சூரிய சக்தியானது வினைத்திறன்மிக்க சக்தியினை உருவாக்கவல்லது.

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளில் பட்டு தெறிப்படையும் சூரிய ஒளியானது இத்திட்டத்தில் உபயோகிக்கப்படும் குழாய்கள் போன்ற உபகரணங்களை சூடாக்க பயன்படும். மேலும் மின்சாரத்தினை பெறவும் பயன்படவுள்ளது.


அல்காக் குளங்கள் 

மற்றைய வளங்களின் மூலம் உற்பத்திசெய்வதை  விட 30 மடங்கு அதிகமான எரிபொருளை அல்காக்களின் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.

போடோபயோரியாக்டர்கள் மூலம் ஒளித்தொகுப்பு செயற்பாட்டின் ஊடாக  ஆழமற்ற உவர்நீர் கொண்ட தடாகங்களில் அல்காக்களை உற்பத்திசெய்ய முடியும்.

இத்தாவர வகையின் கொழுப்பு எண்ணெயிலிருந்து உயிர் எரிவாய்வினைப் பிரித்தெடுக்கவும் முடியும்.

அல்காக்கள் அதிக உணவுகள் மற்றும் எரிபொருள் உற்பத்தி செய்யப் பயன்படுகின்றது.




கருத்துகள்