இந்தியாவின் முதலாவது 'டெப்லட்' கணினி


'ஒலிவ் டெலிகொம்' என்பது இந்தியாவில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும்.

'ஒலிவ் ஸிப்புக்' எனப்படும் இந்தியாவின் முதலாவது 3ஜி தொழிநுட்பத்துடன் கூடிய ' நெட் புக்' மற்றும் 'ஒலிவ் விஸ்' எனப்படும் இந்தியாவின் முதலாவது 3 'சிம்'களைக் கொண்டு இயங்கக் கூடிய கையடக்கத் தொலைபேசி என்பன இதன் முக்கிய தயாரிப்புக்களாகும்.

இந்நிலையில் அந்நிறுவனம் இந்தியாவின் முதல் 3.5 ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் 'டெப்லட்' ரக கணினியை அண்மையில் அறிமுகம் செய்தது. கையடக்கத் தொலைபேசியாகவும் உபயோகிக்க முடியுமென்பதே அதன் சிறப்பம்சமாகும்.

'ஒலிவ் பேட் விடி 100' என இவ்வுபகரணம் அழைக்கப்படுகிறது. இது 7 அங்குல தொடுந் திரையைக் கொண்டுள்ளது.

'கூகுளி'ன் 'அண்ட்ரோயிட்' இயங்கு தளத்தினைக் கொண்டு இயங்குகின்றமை இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

'ஜிபிஎஸ்', 'புளூடூத்', 'வை-பை', 'டீவி டியூனர்' ஆகிய வசதிகளையும் 3 'மெகாபிக்ஸல்' கெமரா வசதியையும் இந்த உபகரணம் உள்ளடக்கியுள்ளது.

'512 எம்பி' + '512 எம்பி' உள்ளக நினைவாற்றலை இது கொண்டுள்ளதுடன் இதனை '32 ஜிபி' வரை 'மைக்ரோ எஸ்டி' இன் மூலம் அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

இதன் விலை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் 500 அமெரிக்க டொலர் வரை விலை மதிப்பிடப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள்