பிரபல தேடல் பொறியான ( சேர்ச் இன்ஜின் ) கூகுள் தனது 12 ஆவது வருட நிறைவை இன்று கொண்டாடுகின்றது.
கூகுள் சிறப்பு நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் தனது லோகோவில் மாற்றங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இம்முறை இதனை நினைவுபடுத்தும் வகையில் கூகுள் லோகோவுக்குப் பதிலாக விசேட சித்திரமொன்றினை வெளியிட்டுள்ளது. கூகுளின் பெயர் பொறிக்கப்பட்ட கேக் சித்திரமே அதுவாகும்.
மேற்படி சித்திரம் லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 89 வயதான வெய்ன் தீபாவுட் என்ற ஓவியருடையது.
கூகுள் நிறுவனம் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டது. இது 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி தனியார் ஸ்தாபனமாக்கப்பட்டது.
கூகுள் முன்னர் தனது பிறந்த தினத்தை செப்டம்பர் 7 ஆம் திகதியே கொண்டடி வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் 27 ஆம் திகதியே கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி கூகுள் உலகின் முதல் தர தேடல் பொறியாக விளங்குகின்றது.
கூகுள் தேடல் பொறி சேவையை மட்டுமன்றி ஜீமெயில், மெப்ஸ், புளக், ட்ரான்ஸ்லேடர், யூடியூப் உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள்
கருத்துரையிடுக