5 பில்லியன் புகைப்படங்கள் தரவேற்றம் : ஃபிலிக்கர் அறிவிப்பு




5 பில்லியன் புகைப்படங்கள் என்ற மைல்கல்லினை தாம் எட்டியுள்ளதாக ஃபிலிக்கர் அறிவித்துள்ளது.

ஃபிலிக்கர், புகைப்படங்கள் மற்றும் வீடியோ சேகரிப்புத் தளமாகும். இணைய சமூகம், இலகுவாக தமது ஒளிப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றைச் சேமித்துப் பகிர ஏதுவான தளமாக இது விளங்குகின்றது.

இது பிரபல யாஹூ நிறுவனத்திற்கு உரித்துடையது. 5 பில்லியன் புகைப்படங்களில் இறுதியானதை 'யியோஹாரன்' என்ற பாவனையாளரே, தரவேற்றம் செய்துள்ளார்.

ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 30,000 படங்கள் அதன் இணையத்தளத்தில் தரவேற்றப்படுவதாக ஃபிலிக்கர் தெரிவிக்கின்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஃபிலிக்கர் 2 பில்லியன் இலக்கினை அடைந்தது.

கருத்துகள்