தடுமாறும் அடோப்


தனது ரீடர், பி.டி.எப் விவ்வரில் குறைபாடு உள்ளதாக பிரபல மென்பொருள் நிறுவனமான 'அடோப் சிஸ்டம்ஸ்' கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதன் மற்றுமொரு மென்பொருளான 'பிளாஷ்'ஷிலும் குறைபாடுகள் உள்ளன என அது தற்போது அறிவித்துள்ளது.

மேற்படி பிளாஷில் உள்ள குறைபாட்டை தாம் 2 வாரங்களிலும், ரீடரில் உள்ளவற்றை 3 வாரங்களிலும் நிவர்த்தி செய்வதாக அது அறிவித்துள்ளது.

இக்குறைபாடுகளைப் பயன்படுத்தி 'விண்டோஸ்' கணினிகளைத் தாக்குவதாகவும் இதன் காரணமாக தாக்குதல் நடத்துபவர்கள், கணினியை முற்றாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சாத்தியப்பாடும் உள்ளதாக 'அடோப்' தெரிவித்திருந்தது.

எனினும் மேற்படி குறைபாடு மெக், லினக்ஸ், சொலாரிஸ் மற்றும் கூகுளின் அண்ட்ரோயிட் ஆகியவற்றுக்கான பிளாஷிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்திசெய்ய 'மைக்ரோசொப்ட்' மற்றும் 'அடோப்' என்பன துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்