கூகுள் குரோம் இயங்குதளத்தின் 7 ஆவது பதிப்பு வெளியீடு ( DOWNLOAD HERE)

                 

கூகுள் குரோம் இயங்குதளத்தின்( Browser) 7 ஆவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வியங்கு தளமானது மெக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்கு தளங்களுக்கு (Operating System) இயங்கக் கூடியதாகும்.

இது தொடர்பாக அதன் வலைப்பூவில் (Blog) அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய பதிப்பில் காணப்பட்ட நூற்றுக்கான பிழைகளைத் திருத்தியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.

மேலும் சிறப்பாக இயங்கக் கூடிய HTML 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக குரோம் பாவனையாளர்கள் தானாக 'அப்டேட்'களைப் பெறுவதுண்டு.

கூகுளின் தரவிறக்கம் செய்யும் பக்கத்திலிருந்து அதனை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

கருத்துகள்