கூகுளின் சேவைகளின் ஒன்றான கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ' ( Google street view ) பல நாடுகளில் சர்ச்சைக்குள்ளானதும் , பலரால் வரவேற்கப்படுவதுமான ஒரு சேவையாகும். இது தற்போது அண்டார்டிக்கா கண்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ' என்பது உலக நகர வீதிகளின் அமைவிடங்களைப் புகைப்படங்களாகக் காண்பிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.
2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை, தற்போது 25 நாடுகளைக் கொண்டுள்ளது.
மேற்படி சேவையானது உலகின் பெரும்பாலான முன்னணி மற்றும் பின்தங்கிய நகரங்களின் புகைப்படங்களைக் காண்பிக்கின்றது. இவற்றுள் நகர வீதிகள் , வீடுகள், வியாபார ஸ்தாபனங்களின் அமைவிடங்கள் போன்றவை அடங்குகின்றன.
தற்போது இச்சேவையானது அண்டார்டிக்கா கண்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அச்சேவை உலகின் 7 கண்டங்களையும் உள்ளடக்குகின்றது.
தற்போதைக்கு சேவை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுமெனவும் பிறகு விஸ்தரிக்கப்படுமெனவும் கூகுள் அறிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக