கூகுளின் தானியங்கிக் கார் : செயற்கை அறிவாண்மைப் புரட்சி ( காணொளி இணைப்பு)


கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது.

சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை ( Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.

காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது.

இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன.

இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது.

கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இக்கார்களுக்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்