பேஸ்புக்கின் ' தற்காலிக ' கடவுச் சொல் வசதி


சர்ச்சைகளின் உறைவிடமாகிவிட்டது பேஸ்புக். எனினும் புதுப்புது வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் பேஸ்புக் தவறவில்லை.

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password).

பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம்.

இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும்.

உங்கள் கைத்தொலைபேசிகளில் 'otp' என டைப் செய்து 32665 என்ற இலக்கத்திற்கு அனுபினால் உங்களுக்கான கடவுச்சொல் கிடைக்கப்பெறும்.

இதனை ஒரு தடவை மற்றும் 20 நிமிடங்கள் வரையே பயன்படுத்தமுடியும். இதனால் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படுகின்றது.

கடந்தவாரம் பேஸ்புக் ' ரிமோட் லொக் அவுட்' வசதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இன்னும் சில நாட்களில் இவ்வசதியை அனைவரும் பெறக்கூடியதாகவிருக்கும்.

கருத்துகள்