உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லையிட் எல்.இ.டி தொலைக்காட்சி



உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லையிட் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியினை எல்.ஜி கடந்தவாரம் கொரியாவில் வெளியிட்டது.

72LEX9 என இம் மாதிரி பெயரிடப்பட்டுள்ளது.

இது 72 அங்குல திரையைக் கொண்டுள்ளது.

இதுவே உலகில் தற்போது வணிகரீதியாக விற்பனைசெய்யப்படும் மிகப் பெரிய திரையைக்கொண்டுள்ள பெக்லையிட் எல்.இ.டி (LED) முப்பரிமாண தொலைக்காட்சி ஆகும்.


தற்போது கொரியாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இத்தொலைக்காட்சியானது அடுத்த ஆண்டளவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்குவருமென தெரிவிக்கப்படுகின்றது.


உலகிலேயே மிகப்பெரிய முப்பரிமாண தொலைக்காட்சியாக கருதப்படுவது மிட்சுபிஸி நிறுவனத்தின் Diamond WD-82838 ஆகும்.


இதன் தொழிநுட்ப அம்சங்களாவன்.

1) 480Hz TruMotion panel
2) Full LED backlight
3)10,000,000:1 contrast ratio,
4) Wireless AV link and DLNA.
5) 4 HDMI ports
6) 1 USB
7) YouTube and Google Picasa support

உலகிலேயே மிகப்பெரிய முப்பரிமாண தொலைக்காட்சியாக கருதப்படுவது மிட்சுபிஸி நிறுவனத்தின் Diamond WD-82838 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்