பார்வை இழந்தவர்களுக்கு பார்வையை வழங்கக்கூடிய அதிநவீன 'சிப்' ஒன்றினை ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் படி கண்களின் பின்பகுதி விழித்திரையில் 'சிப்' ஒன்று பொருத்தப்படுகின்றது.
இதனூடு ஒளிகடத்தப்படும்போது அது இலத்திரனியல் தூண்டல்களாக மாற்றப்பட்டு பார்வை நரம்புகளுக்குச் செலுத்தப்படுகின்றது.
பார்வையற்றவர்களுக்கு இதன்மூலம் பொருளை இனங்கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது.
இந்தச் 'சிப்' பானது 'ரெடினிடிஸ் பிக்மென்டோஸா' எனப்படும் பரம்பரை கண்நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பெரிதும் பயனளிக்குமென நம்பப்படுகின்றது.
ஏ.ஜி. என்ற ஜேர்மனிய நிறுவனம், 'ஒப்தல்மிக்' ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இதனைத் தயாரித்துள்ளது.
இவ்வுபகரணத்தில் சுமார் 1500 ஒளி உணர் 'சென்ஸர்'கள் பொருத்தப்பட்டுள்ளன.<br><br>
இது தொடர்பான காணொளிகளை இங்கு காணலாம்.1
கருத்துகள்
கருத்துரையிடுக