உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் துறையாக ரோபோடிக்துறை விளங்குகின்றது.
இந்நிலையில் ' ஜெமினொயிட் எப் ' (Geminoid F) என பெயரிடப்பட்டுள்ள நடிக்கும் திறன் கொண்ட ரோபோவினை ஜப்பானியர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதனை உருவாக்கியவர் 'ஹிரோசி இசிகுரோ' என்ற ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஜப்பானிய ரோபோ வடிவமைப்பாளர் ஆவார்.
பொதுவாக இவரது அண்ரோயிட் ரோபோக்கள் 1.2 மில்லியன் அமெரிக்கடொலர்கள் விலைகொண்டவை.
இந்த ரோபோவானது, அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பாத்திரமொன்றினை ஏற்று நடித்திருந்தது.
இதன் அசைவுகள் மற்றும் உணர்வுகளை நாடக மேடைக்குப் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அறையில் நடிகை ஒருவர் வெளிப்படுத்தினார்.
இப்பாவனைகள் கெமராவின் உதவியோடு ரோபோவினால் இணங்காணப்பட்டதுடன் ரோபோ அதற்கேற்றவாறு நடித்திருந்தது.
இதன் குரலுக்காக மைக்ரோபோன் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் நடிப்புத்திறனை நீங்களும் கண்டு களியுங்களேன்.
இது குறித்து நான் ஒரு மொக்கை போடுவதாக இருந்தேன். ஆனால், இதைப் பார்த்தபிறகு எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். நன்றி! :-) நல்ல பகிர்வு!
பதிலளிநீக்கு