கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவதாக கூறப்படும் 'கூகுள் மீ' எனப்படும் சமூக வலைப்பின்னல் (Social Network) தளமானது அடுத்தவருடமே அறிமுகப்படுத்தப்படுமென தகவல்கள் கசிந்துள்ளன.
ஆரம்பத்தில் இவ்வருட இறுதியில் அது வெளியிடப்படுமென கூறப்பட்ட போதிலும் தற்போது அத்திகதி அடுத்தவருடம் மார்ச் அல்லது ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தனது உருவாக்கத்தினை கூகுள் மிக இரகசியமாக பேணி வருகின்றது.
சமூகவலைப்பின்னல் சந்தையில் பேஸ்புக் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. அதன் தற்போதைய மொத்த பாவனையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனுக்கும் அதிகமாகும்.
இதனை முறியடிப்பதற்கு கூகுள் பல்வேறு சமூக வலைப்பின்னல் தளங்களை உருவாக்கியிருந்தது ஆனால் அவை அனைத்தும் பேஸ்புக் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. உதாரணமாக ஓர்குட்(Orkut), கூகுள் பஸ்(Google Buzz), கூகுள் வேவ்(Google Wave).
இந்நிலையிலேயே மற்றுமொரு முயற்சியாக 'கூகுள் மீ' தளத்தினை கூகுள் உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதன் மற்றைய பக்கத்தில் பேஸ்புக்கானது மெஸேஜஸ், பிளேசஸ், குரூப்ஸ் வசதிகள் மற்றும் ஸ்கைப்புடன் இணைவு, மைஸ்பேஸுடன் இணைவு என இன்னுமொரு பரிமாணத்திற்கு சென்று கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக