சிரியாவில் 2100 வருடங்கள் பழமையான ஆலயத்தின் சிதைவுகள் (பட இணைப்பு)

சிரியாவில் 2100 வருடங்கள் பழமையான ஆலயமொன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் டமஸ்கஸ் மாகாணத்திலிருந்து 106 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சுவய்டா மாகாணத்திலேயே இவ்வாலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆலயமானது 'நபாடாயின்ஸ்' என்ற யுகத்துக்குரியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.'நபாடாயின்ஸ்' யுகமானது கி.மு 169 - கி.பி 106 வரையிலான காலப்பகுதியாகும். 

இக்காலப்பகுதி இராச்சியமானது சினாய் வளைகுடாவிற்கும் அராபியா வளைகுடாவிதற்கும் இடையில் அமைந்திருந்ததுடன் 'பெட்ரா' நகரை தலைநகராகவும் கொண்டிருந்தது. 

கி.மு 323 முதல் கி.மு 146 காலத்திற்கு உட்பட்ட 'எலனிஸ்டிக்' எனப்படும் நாகரிகத்திற்குரிய ஆலயமொன்றின் மீதே இவ்வாலயம் அக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் இவ்வாய்வின்போது பாறையில் செதுக்கப்பட்ட கல் மயானம் உட்பட பல வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 










கருத்துகள்