பாதரசமானது ஆண் பறவைகளை தன்னினச் சேர்க்கைகளாக மாற்றுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
அமெரிக்க புளோரிடா பல்கலைக்கழகத்தைச் விஞ்ஞானியொருவரும் இலங்கை விஞ்ஞானியான நில்மினி ஜயசேனவும் இணைந்து வெள்ளை 'இபிசெஸ்' என்ற பறவையினத்தில் இப்பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர்.
இதன் பிராகாரம் தொழிற்சாலைக் கழிவுகளினால் நீர் மாசடைவதால் அதில் உள்ள பாதரசக் கழிவுகளை அருந்த நேரிடும் ஆண் பறவைகள் ஆண் பறவைகளுடனே புணர்வதாகவும் அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இத்தன்னினச் சேர்க்கையினால் இப்பறவையினத்தின் இனப்பெருக்கம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இவ்வினத்தைச் சேர்ந்த சுமார் 160 பறவைகளை ஆய்வுக்குட்படுத்திய போது, அதிக உணவுடன் அதிக பாதரசத்தினை உட்கொண்ட பறவைகள் கூடிய விரைவில் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
இதற்கான காரணம் பொதுவாக ஆண் இனத்தில் சுரக்கும் தெஸ்தெஸ்தரோன் ஹோர்மோனை பாதரசம் குறைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முடிவானது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் ஆனால் இவை முலையூட்டிகளிடையே எவ்வகையான தாக்கத்தினை செலுத்தும் என்பது தொடர்பில் இன்னும் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக