தென்கொரியாவுக்கு எதிரான புனிதப்போருக்குத் தயாராகும் வடகொரியா

                              

நீதிக்கான புனிதப் போரில் அணு ஆயுதம் மூலம் தென்கொரியாவுக்கு பதில் வழங்கத் தாயார் வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வட மற்றும் தென் கொரியா நாடுகளின் எல்லையில் தென்கொரியா நடத்தி வரும் பயிற்சி மற்றும் ஒத்திகையானது போருக்கான முன்னேற்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஒத்திகையானது தென்கொரிய வரலாற்றில் மிகப்பெரியதாகும். இதன்போது தாங்கிகள், ஹெலிகொப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் பங்குகொண்டிருந்தன.

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலையை தவிர்ப்பதற்கு உலக நாடுகள் பல முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





                    

கருத்துகள்