பறவையைப் போல் பாடும் எலி: மரபணுவியல் தொழிநுட்பத்தில் விஞ்ஞானிகள் சாதனை ( காணொளி இணைப்பு)

பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic engineering) மூலம் உருவாக்கியுள்ளனர்.

ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரினமானது மரபணுப் பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்டதாகும்.

இதனை தாம் எதிர்ப்பார்த்திருக்கவில்லையெனவும் ஆனால் தமக்கு இதன் குரல் மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். 

இதன் உருவாக்கமானது விஞ்ஞான உலகில் பாரியதொரு மைல் கல்லெனவும் கலப்புப்பிறப்பாக்கத்திற்கும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளிலும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.                                                                                                         


கருத்துகள்