சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க காம களியாட்டங்கள் : விக்கிலீக்ஸ்




சவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆவணம் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

சவூதியின் அரச குடும்பத்தினரின் குறிப்பாக இளம் வாரிசுகளின் களியாட்டங்களில் விபசாரிகள் மற்றும் மதுவகைகள், போதைப்பொருள் முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அல்-துனயான் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் நடத்திய  களியாட்டம் ஒன்றில் சவூதியின் முற்றுமுழுதான இஸ்லாமிய சட்டதிட்டங்கள்  மீறப்பட்டதாகவும் மதுபானம் விநியோகப்படுத்தப்பட்டதுடன் விலைமாதர்களும்  களியாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொகெயின் மற்றும் அசீஸ் வகை போதைபொருட்களும் இங்கு பரிமாறப்பட்டமை தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இவை அனைத்தும் இரகசியமாகவே இடம்பெற்றதாகவும், சுமார் 150 இற்கும் மேற்பட்ட 20  - 30 வயதுக்கிடைப்பட்ட ஆண் மற்றும் பெண்கள் இதில் கலந்து கொண்டதாகவும் இவர்களைத் தடுப்பதற்கு அந்நாட்டு பொலிஸார் கூட அஞ்சியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

இத்தகைய களியாட்டங்கள்  சவூதி நாட்டின் இளவரசர்களிடையே  தற்போது சகஜம் எனவும் சிலரின் வீடுகளுக்குள்ளேயே மதுபானசாலை, டிஸ்கோ ஆகியவை உள்ளதாகவும் அவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அவ் ஆவணத்தினை இங்கு காணலாம். http://213.251.145.96/cable/2009/11/09JEDDAH443.html

கருத்துகள்