சிலருக்கு வயதானாலும் ஆசை அடங்குவதில்லை. இதனை நிரூபிக்கும் வகையில் பல விடயங்கள் எங்கள் காதுகளுக்கு எட்டிய வண்ணமே உள்ளன.
அண்மையில் கூட 94 வயதில் தந்தையான தாத்தா, இளம் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய முதியவர் என வரிசை நீண்டுகொண்டே போகின்றது.
இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த 110 வயதான நபரொருவர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள 82 வயதான பெண்மணியொருவர் தயாராகவுள்ளதாகவும் எனவே விரைவில் மணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அஹமட் மொஹமட் இஸா என்ற அந்நபருக்கு 20 பேரக்குழந்தைகளும், 40 கொள்ளுப் பேரன் பேத்திகளும் இருக்கின்றனர்.
இவர் இதற்கு முன்னர் 5 தடவை திருமணமானவர். இவரின் 4 மனைவிகள் உயிரிழந்ததுடன் ஒருவரை இவர் விவாகரத்து செய்துள்ளார்.
இம் முதியவர் தன்னைப் பராமரிப்பதற்கும் தனக்கு துணையாகவும் ஒருவர் தேவையென பத்திரிக்கையொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இதனை பார்வையிட்ட சானா அஹமட் என்ற 82 வயதான பெண்மணி இவ்விடயத்தில் தான் விருப்பமாக இருப்பதாகவும் இது தொடர்பாக இஸாவை தொடர்புகொள்ளுமாறு சானா தனது குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளார்.
சானா அஹமட் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் விதவையானனவர் என்பதுடன் 9 பிள்ளைகளின் தாயுமாவார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சானா இறந்த தனதுகணவருக்கும் இஸாவிற்கும் நிறைய உருவ ஒற்றுமைகள் உள்ளதாகவும் அதனாலேயே தான் கவரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக