சவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகினால் பரபரப்பு (பட இணைப்பு) _

இஸ்ரேலிய மொஸாட் புலானாய்வு சேவையினால் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கழுகு ஒன்றினை சவூதி அரேபிய பாதுகாப்புத்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இக் கழுகானது சவூதியின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே பிடிக்கப்பட்டுள்ளது. 

இதன் கால்களில் டிரான்ஸ்மிட்டர் எனப்படும் ஒலி அனுப்பும் கருவி ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் அதில் இஸ்ரேலின் பிரபல 'டெல் அவிவ்' பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இப்பறவையின் இடப்பெயர்ச்சி தொடர்பான ஆராய்சிகளுக்காகவே இவ்வாறு அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

எனினும் இந்நடவடிக்கையானது யூதர்களின் சதியென சவூதி கருதுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் செங்கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சுறா மீன் தாக்குதலால் கொல்லப்பட்டனர். 

இந்நடவடிக்கையானது எகிப்திய சுற்றுலாத்துறையை சீர்கெடச் செய்ய இஸ்ரேலிய புலனாய்வுத்துறையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையெனவும் அவர்களே சுறா மீன்களை குறித்த கடற்பகுதிக்குள் அனுப்பியிருக்கலாம் என எகிப்திய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.                                                                                                                                                                                           

கருத்துகள்