யானைக்கும் அடி சறுக்கும்! எனபது முதுமொழி.
இது யானைக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.
இதனை ஊர்ஜிதம் செய்யும் சம்பவமொன்று அண்மையில் நடந்தது.
தடுக்கியது வேறு யாருமல்ல அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன்.
இவர் யேமன் நாட்டிற்கு அண்மையில் இராஜதந்திர விஜயம் ஒன்றை மேற்கொள்ள புறப்பட்டிருந்தார்.
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அவர் விமானத்தினுள் நுழையும் போது திடீரென்று தடுக்கி விழுந்தார்.
பின்னர் உடனே அருகில் இருந்த ஊழியர் ஒருவரின் உதவியுடன் எழுந்து விமானத்தினுள்ளே சென்று விட்டார்.
இக்காட்சிகளானது அங்கிருந்த ஊடகவியலாளர்களினால் பதிவு செய்யப்பட்டது.
தற்போது அக்காணொளியானது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படமெடுப்பதினை தவிர்ப்பதற்காக அவர் விழுந்து சற்று நேரத்தில் அங்கிருந்த மின்விளக்கு உடனே அணைக்கப்பட்டது.
எனினும் அதற்குள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக