கூரிய பற்களைக்கொண்ட வெம்பயர் பறக்கும் தவளைகள்: வியட்நாமில் கண்டுபிடிப்பு


வழமைக்கு மாறான புதிய வகை தவளை வகையொன்றினை அவுஸ்திரேலிய விஞ்ஞானியொருவர் தென் வியட்நாம் காடுகளில் கண்டுபிடித்துள்ளார்.

இத் தவளையினத்துக்கு 'வெம்பயர் பிளையிங் புரக்'என பெயரிட்டுள்ளனர்.அதாவது பறக்கும், இரத்தம் குடிக்கும் தவளையாகும்.


இத்தவளைகள் மரத்திற்கு மரம் தனது கால்களில் காணப்படும் மென்சவ்வின் உதவியுடன் பறப்பதாகவும் அவ் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தவளை இனத்தின் குஞ்சுகளானது மிகவும் கூரிய பற்களை உடையன.

இவ்வினமானது அடர்ந்த காடுகளில் உள்ள சிறிய நீர் நிலைகளிலும், மரப் பொந்துகளிலுமே வாழ்கின்றன.

இத்தவளை இனம் பற்றி தற்போதே அறியக்கிடைத்திருப்பதாகவும் இது தொடர்பில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்