'ஐ கிளவுட்': அறிமுகப்படுத்தியது அப்பிள்





அப்பிள் தனது ஐ கிளவுட் (iCloud) எனப்படும் மேக நினைவக சேவையை (cloud storage service) நேற்று அறிமுகப்படுத்தியது.

சென் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற அப்பிளின் மென்பொருள் அபிவிருத்தியாளர்களுக்கான மாநாட்டிலேயே இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐ கிளவுட்டானது 9 பிரதான அப்ளிகேஷன்களை கொண்டதாகும். இவற்றில் அதிகமானவை அப்பிளின் மொபைல் மீ சேவையில் காணப்பட்டதாகும்.

இப்புதிய சேவையானது பாவனையாளரின் தரவுகளை அதாவது மின்னஞ்சல்கள், அப்ளிகேஷன்கள், கோப்புக்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை ஒன்லைன் சேர்வரில் சேமித்து வைக்க உதவுவதுடன் கணனி மற்றும் மொபைல் உபகரணங்களின் ஊடாக அவற்றிற்குள் நுழையமுடியும்.




இதன் பிரகாரம் பாவனையாளர்கள் தாம் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கு இணையத்தின் ஊடாக வெவ்வேறு உபகரணங்களின் வாயிலாக நுழைய முடியும்.

குறித்த சேவையானது அப்பிளின் ஐ போன், ஐ பேட் மற்றும் மெக் ஆகியவற்றிற்கிடையில் ஒரு பாலமாக செயற்படுமென தெரிவிக்கின்றது.

உதாரணமாக ஐ கிளவுட் கணக்கொன்றினை வைத்திருக்கும் ஐ போன் பாவனையாளர் புதிய தொடர்பு இலக்கமொன்றினை பதிவு செய்வாராயின் அது உடனேயே அவரது ஐ கிளவுட் கணக்கிற்கு அனுப்பப்படுவதுடன் அப் பாவனையாளரின் மற்ற உபகரணங்களுடன் அது இணைக்கப்படும்.

மேலும் ஐ போனில் இரு புகைப்படம் எடுக்கப்படுமாயின் அதனை ஐபேட்டின் ஊடாக பார்வையிட முடியும்.

இச்சேவையானது அப்பிளின் ஐ ஓஎஸ் இயங்குதளத்தின் உதவியுடன் இயங்கும் ஐபோன், ஐ பேட் மற்றும் ஐ பொட் உபகரணங்களின் மூலம் உபயோகிக்க முடியும்.

இந்நிகழ்வில் அப்பிள் தனது ஐபேட் கணனி, ஐ போன் ஆகியவற்றின் இயங்குதளங்களின் மேம்படுத்திய 'iOS 5' என்ற புதிய தொகுப்பினையும் , மெக் வகை கணனிகளுக்கான 'Mac OS X Lion' இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியது.



இவை புது வசதிகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளன.

இவையும் சந்தையில் வெளியாகும் முன்னரே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
























கருத்துகள்