போலி உற்பத்திகளின் தாயகம் சீனா: 'அப்பிள் ஸ்டோர்ஸ்' ஐயும் விட்டுவைக்கவில்லை (பட இணைப்பு)


போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான்.

ஆரம்ப காலத்தில் மற்றைய நிறுவனங்களின் இலத்திரனியல் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியது சீனா.

மென்பொருட்கள் முதல் ஆடைகள் வரை அனைத்தினையும் விட்டு வைக்கவில்லை.

போலி உற்பத்திகளை உருவாக்குவதில் அடுத்த பரிணாமமாக தற்போது சீனாவில் போலி கடைகளும் முளைவிடத் தொடங்கியுள்ளன.

இதற்கு முதன் முதலாக இலக்காகியுள்ளது 'அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்'.










அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ- பேட் ஆகியவை சீனாவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

சீனாவின் போலி உற்பத்தியாளர்கள் இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் . பல போலி அப்பிள் ஸ்ட்ரோர்ஸ் மற்றும் அனுமதியற்ற விநியோகஸ்தர்கள் அங்கு நிறைந்து வழிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நடைபெற்ற ஆரம்பகட்ட விசாரணைகளில் பல போலி அப்பிள் ஸ்ட்ரோர்ஸ்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய போலி ஸ்ட்ரோர்ஸ்கள் சீனாவில் மட்டுமன்றி வெனிசூலா மற்றும் ஸ்பெய்ன் உட்பட பல நாடுகளிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சீனாவில் அப்பிளின் உத்தியோகபூர்வ ஸ்ட்ரோர்கள் 4 மட்டுமே அமைந்துள்ளன.

இவற்றில் 2 பீஜிங்கிலும் மற்றைய இரண்டும் சங்காயிலுமே அமைந்துள்ளன.

மேலும் சிலர் அப்பிளின் அனுமதி பெற்ற விநியோகஸ்தர்கள் ஆவர்.

போலி உற்பத்திகள் அப்பிளின் வர்த்தக நாமத்திற்கும், தரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக அப்பிள் தற்போது கவலை வெளியிட்டுள்ளது.

கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தத்வரூபமாக நடைபெறும் போலி வியாபாரத்தினை நீங்களும் பாருங்கள்.










கருத்துகள்