Blogger இயக்குவது.
Loading...

Labels

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Followers

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Sociable

இந்த வலைப்பதிவில் தேடு

24 பிப்ரவரி 2011மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள் அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர்.

நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர்.

சென் டியாகோ தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது.

டைசன் ஸ்மித் என்ற 36 வயதான நபருக்குச் சாதாரண இதயத்தின் அருகில் வலது பக்கத்தில் இன்னொரு இதயம் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.

இதயத்தின் இடது இதயவறை, புது இதயத்துடன் சத்திரசிகிச்சையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றம் பெற்ற குருதி, பழைய இதயத்திலிருந்து புதிய இதயத்திற்குப் பாய்ச்சப்படும்.

இதன்பிறகு புதிய இடது இதயக்கீழறையிலிருந்து குருதியானது பெருநாடியின் மூலம் உடலின் பாகங்களுக்கும் பாய்ச்சப்படும். ஓர் இதயம் செய்யும் வேலையை இரு இதயங்களும் பகிர்ந்துகொள்ளும்.

குறித்த நபரின் இதயம் பலவீனமடைந்திருந்தமையினாலேயே அவருக்கு இன்னுமொரு இதயம் பொருந்தப்பட்டது. இச்சத்திர சிகிச்சையானது 'ஹெடரோடொபிக் ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேசன்' என அழைக்கப்படுகின்றது. மிகவும் அரியதொரு சத்திரசிகிச்சையாக இது கருதப்படுகின்றது.

இது நோயாளின் வாழ்நாளை 10 வருடங்களால் அதிகரிக்கும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


இரு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள்.

15 பிப்ரவரி 2011

இதுவரை காலமும் பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் கொக்கா-கோலா பானத்தின் மூலப் பொருள்கள் எவையென்ற ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்க வானொலி நிலையமொன்று தெரிவித்துள்ளது.

கொக்கா- கோலாவின் தயாரிப்பு மற்றும் அதன் மூலப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகளாக இரகசியமாக பேணப்பட்டு வருகின்றது.

அந்நிறுவனத்தின் தகவல்களின் படி 1979 பெப்ரவரி 8 ஆம் திகதி வெளியாகிய 'அட்லாண்டா ஜேர்னல் கொண்ஸ்டியுசன்' என்ற பத்திரிக்கையில் நபர் ஒருவர் புத்தகமொன்றினை திறந்தவாறு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அப்புத்தகத்தில் கொக்கா-கோலா தயாரிக்க தேவையான மூலப்பொருள் மற்றும் சரியான அளவீடுகள் ஆகியவை குறிப்படப்பட்டுள்ளதாக குறித்த ஊடக நிறுவனம் அப்படத்தினை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளதுடன் இது கொக்கா-கோலாவை உருவாக்கியவரான ஜோன் பெம்பர்டன்னினுடைய குறிப்பின் நகல் எனவும் கூறுகின்றது.

இந்த பானத்தின் தயாரிப்பில் "Merchandise 7X" எனப்படும் 7 வகை திரவியங்களின் பங்கே முக்கியமாக கருதப்படுவதாகவும் இவையே கொக்கா-கோலாவிற்கே உரிய சுவையைத் தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை மஸிசிப்பியைச் சேர்ந்த நபர் ஒருவர் 1969 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கா-கோலா நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்றினையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. அக் கடிதத்தில்கொக்கா-கோலாவின் தயாரிப்பு முறையை கண்டறிந்துள்ளதாகவும் அது தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அந்த நபரின் கண்டுபிடிப்பிற்கும் பத்திரிகையில் வெளியாகிய தகவல்களும் பெரும்பாலும் ஒத்துப்போவதாக அந் நிறுவனம் குறிப்பிடுகின்றது. 

கொக்கா-கோலா தயாரிப்பு முறை மற்றும் மூலகங்கள் தொடர்பான தகவல்களானது அமெரிக்க வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே. 

The secret recipe 

Fluid extract of Coca 3 drams USP
Citric acid 3 oz
Caffeine 1oz
Sugar 30 (it is unclear from the markings what quantity is required)
Water 2.5 gal
Lime juice 2 pints 1 qrt
Vanilla 1oz
Caramel 1.5oz or more to colour


7X flavour (use 2oz of flavour to 5 gals syrup):

Alcohol 8oz
Orange oil 20 drops
Lemon oil 30 drops 
Nutmeg oil 10 drops
Coriander 5 drops
Neroli 10 drops
Cinnamon 10 drops