Blogger இயக்குவது.
Loading...

Labels

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Followers

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Sociable

Blog Archive

இந்த வலைப்பதிவில் தேடு

30 செப்டம்பர் 2010

சமூகவலைப் பின்னல் தளமான பேஸ்புக் மற்றும் இணையத் தொலைபேசிச் சேவையான ஸ்கைப் ஆகியவை இணைந்து செயற்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருங்கிணைந்த தகவல் சேவையினை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமென வோல்ஸ்ரீட் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் பேஸ்புக் கணக்கினூடாக ஸ்கைப் கணக்கிற்குள் பிரவேசிக்கமுடியும்.

மேலும் ஸ்கைபின் மூலமாக தங்களது பேஸ்புக் நண்பர்களுடன் செடிங், வொயிஸ் செடிங், வீடியோ செடிங் போன்றவற்றில் ஈடுபடமுடியும்.

மேற்படி இணைந்த சேவையானது, அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள 'ஸ்கைப் 5.0' புதிய தொகுப்பில் உள்ளடக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விரு சேவைகளும் இணைவது பெரும் வரவேற்பைப் பெறுவதாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

27 செப்டம்பர் 2010

பிரபல தேடல் பொறியான ( சேர்ச் இன்ஜின் ) கூகுள் தனது 12 ஆவது வருட நிறைவை இன்று கொண்டாடுகின்றது.
கூகுள் சிறப்பு நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் தனது லோகோவில் மாற்றங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இம்முறை இதனை நினைவுபடுத்தும் வகையில் கூகுள் லோகோவுக்குப் பதிலாக விசேட சித்திரமொன்றினை வெளியிட்டுள்ளது. கூகுளின் பெயர் பொறிக்கப்பட்ட கேக் சித்திரமே அதுவாகும்.

மேற்படி சித்திரம் லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 89 வயதான வெய்ன் தீபாவுட் என்ற ஓவியருடையது.

கூகுள் நிறுவனம் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டது. இது 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி தனியார் ஸ்தாபனமாக்கப்பட்டது.கூகுள் முன்னர் தனது பிறந்த தினத்தை செப்டம்பர் 7 ஆம் திகதியே கொண்டடி வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் 27 ஆம் திகதியே கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி கூகுள் உலகின் முதல் தர தேடல் பொறியாக விளங்குகின்றது.

கூகுள் தேடல் பொறி சேவையை மட்டுமன்றி ஜீமெயில், மெப்ஸ், புளக், ட்ரான்ஸ்லேடர், யூடியூப் உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

23 செப்டம்பர் 2010

உலகின் முதலாவது அதி மேம்பட்ட இணைய ஆயுதம் ஈரானின் அணுச் சக்தி நிலையங்களைத் தாக்க வடிவமைக்கப்பட்டிருக்கலாமென நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கணினி வைரஸான ' ஸ்டக்ஸ்னெட்' இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட மிகவும் அதிநவீன தீங்கு நிரலாக (மெல்வெயார்) கருதப்படுகின்றது.

உலகம் முழுவதும் சுமார் 45,000 வலையமைப்புக்களை மேற்படி தீங்கு நிரல் தாக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ் கண்டறியப்பட்டது.

எனினும் நாடொன்றின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வைரஸ் ஒன்று இனங்காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

' ஸ்டக்ஸ்னெட்' வைரஸானது கணினிகளின் மென்பொருளை மீள் ப்ரோகிராம் செய்யக்கூடியது. மேலும் வேறுபட்ட பல கட்டளைகளைச் செயற்படுத்துமாறு கணினிகளைப் பணிக்கக்கூடியது.

மேற்படி வைரஸானது யு.எஸ்.பி. பென் ட்ரைவர்களினூடாகக் கணினிகளுக்கிடையில் பரிமாற்றப்படக்கூடியது. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இணையப் பாவனையைக் கட்டுப்படுத்தியுள்ள கணினிகள் கூட ' ஸ்டக்ஸ்னெட்' இற்கு இலக்காகும் சாத்தியமுள்ளன.

இவ்வைரஸ் அதிகமாக சிமென்ஸ் நிறுவனத்தின் மென்பொருட்களையே தேடுகின்றது. பிறகு அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றது. இந்த வைரஸானது ஏற்கனவே தனது நாசகார வேலையைத் தொடங்கிவிட்டது.

ஆனால் தற்போதுதான் தங்களுக்கு இது தெரியவந்திருக்கின்றது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பிளக்பெரி கைத்தொலைபேசிகளின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.ஐ.எம் எனப்படும் 'ரீசேர்ச்' இன் மோசன் தனது டெப்லட் ரக கணனியை அடுத்த வாரளமளவில் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இது 'பிளக் பேட்' என பெயரிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய மேற்படி கணினியானது முற்றும் புதியதொரு இயங்குதளத்தினை கொண்டு இயங்கவுள்ளது.

இவ் இயங்குதளமானது ஃக்வ்.என்.எக்ஸ் மென்பொருளாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

7 அங்குல தொடுதிரை, 2 கெமராக்கள், புளூடூத், புரோட்பேன்ட், 1 ஜிகா ஹேர்ட்ஸ் புரசஸர் என்பனவற்றை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அப்பிள் நிறுவனத்தின் 'டெப்லட்' ரக கணினியான ஐபேட் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

சம்சுங், டொஷிபா மற்றும் எச்பி நிறுவனங்கள் தங்கள் டெப்லட் ரக கணினியை வெளியிடவுள்ளன.

இதன் காரணமாக டெப்லட் கணினிச் சந்தையில் கடும் போட்டி நிலவும் என எதிப்பார்க்கப்படுகின்றது.

ஆனால் இது தொடர்பாக ஆர்.ஐ.எம் கருத்தெதையும் தெரிவிக்கவில்லை.

21 செப்டம்பர் 2010
5 பில்லியன் புகைப்படங்கள் என்ற மைல்கல்லினை தாம் எட்டியுள்ளதாக ஃபிலிக்கர் அறிவித்துள்ளது.

ஃபிலிக்கர், புகைப்படங்கள் மற்றும் வீடியோ சேகரிப்புத் தளமாகும். இணைய சமூகம், இலகுவாக தமது ஒளிப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றைச் சேமித்துப் பகிர ஏதுவான தளமாக இது விளங்குகின்றது.

இது பிரபல யாஹூ நிறுவனத்திற்கு உரித்துடையது. 5 பில்லியன் புகைப்படங்களில் இறுதியானதை 'யியோஹாரன்' என்ற பாவனையாளரே, தரவேற்றம் செய்துள்ளார்.

ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 30,000 படங்கள் அதன் இணையத்தளத்தில் தரவேற்றப்படுவதாக ஃபிலிக்கர் தெரிவிக்கின்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஃபிலிக்கர் 2 பில்லியன் இலக்கினை அடைந்தது.

20 செப்டம்பர் 2010
பிரபல சமூக வலைபின்னல் தளமான 'பேஸ்புக்', கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி வருவதாக 'டெக்கிரன்ச்' இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

மூன்றாம் நபர் வன்பொருளில் இயங்குவதற்கான இயங்குதளத்தினை ( ஒபரேடிங் சிஸ்டம்) 'பேஸ்புக்' தயாரித்து வருகின்றதென அத்தளம் குறிப்பிட்டிருந்தது.

கூகுளின் 'அண்ரோயிட்' இயங்குதளத்தினைப் போன்ற ஒரு முயற்சியில் 'பேஸ்புக்' இறங்கியிருக்கலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூகுளின் 'அண்ரோயிட்' கையடக்கத் தொலைபேசிகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கையடக்கத் தொலைபேசியானது தனது சமூக வலைப்பின்னலை அடிப்படையாக கொள்ளவுள்ளதாகவும், இதன் மூலம் பாவனையாளர்கள் இலகுவாக 'பேஸ்புக்'கினை உபயோகிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் சிறப்பம்சங்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கசிந்த வண்ணமுள்ளன. எனினும் மேற்படித் தகவல் வதந்தியெனவும் தாம் அவ்வகையான இரகசிய நடவடிக்கை ஒன்றில் ஈடுபடவில்லையெனவும் 'பேஸ்புக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வாளர்களின் கருத்துப்படி பேஸ்புக் அவ்வாறு கைத்தொலைபேசியினை வெளியிடுமாயின் அது பெரிய வரவேற்பைப் பெறும் சாத்தியமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் மொத்த 'பேஸ்புக்' பாவனையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனுக்கும் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.

17 செப்டம்பர் 2010


பல நவீன வசதிகள் கொண்டதாகவும் புதிய தோற்றத்துடனும் தனது மெயில் சேவையை யாஹூ வெளியிடவுள்ளது.

மிக வேகமான சேவை, புதிய கண்கவர் தோற்றம், குறைந்தளவிலான ஸ்பாம் என்பவவையே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

தனது பாவனையாளர்கள் வேகமாக குறைந்து வருவதே இதற்கான முக்கிய காரணமாகும்.

யாஹூ மெயில் சேவையானது ஐ பேட் மற்றும் அண்ரோயிட் ஆகியவற்றிற்கு ஏதுவான யூசர் இன்டர் பேஸினை உருவாக்கிவருகின்றது.

அப்பிளின் ஐஓஎஸ் மற்றும் அன்ரோயிட் இயக்குதளங்களில் வேகமாக இயங்குவதற்காக யாஹூ மெயிலானது முற்றிலுமாக எச்டிஎம்எல் 5 இன்டர் பேஸிற்கு நகரவுள்ளது.

டுவிட்டர் மற்றும் பேஸ்புக் என்பனவற்றுடன் யாஹூ இணைந்து மிகச் சுலபமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும் தனது தேடல் பொறியையும் யாஹூ மேம்படுத்தவுள்ளது.

பாவனையாளர்கள் இதன் மூலமாக அதிகமான தகவல்கள் சிறப்பான புகைப்படங்கள் வீடியோக்கள் என்பனவற்றையும் பெறக்கூடியதாகவிருக்கும்.

 

16 செப்டம்பர் 2010

மைக்ரோசொப்ட் கோர்ப்ரேசன் இன்டர்நெற் எக்ஸ்ப்லோரர் 9 சோதனைத்தொகுப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

இது மிகவும் வேகமாக இயங்குமெனவும் சிறப்பான வரைகலை (கிராபிக்ஸ்) அனுபவத்தினை தரக்கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 சோதனைத்தொகுப்பு சுமார் 30 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

எச்.டி.எம்.எல் 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது.

இதன் வேகமான அதிக பாதுகாப்பான செயற்பாட்டிற்கு தாம் உத்தரவாதமளிப்பதாக மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இதனோடு மைக்ரோசொப்டின் பிங் தேடல் தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கூகுளிற்கு தகுந்த போட்டியளிக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாவனையாளர்களின் விருப்பத்தெரிவில் உள்ள தளங்களை இயங்குதளத்தினுள் நுழையாமல் விண்டோஸ் டாஸ்க் பாரின் ஊடாக நுழைய முடியும்.

இயங்குதள சந்தையில் அதிக பங்கினை கொண்டுள்ள இன்டர்நெற் எக்ஸ்புளோரர் கடந்த சில வருடங்களாக பயர்பொக்ஸ் மற்றும் குரோமிடம் தனது பங்கினை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

14 செப்டம்பர் 2010


ரோபா தெஸ்பியன் 15 மொழிகளை பேசக்கூடியவாறு புரோகிராம் படுத்தப்பட்டதும் மனிதர்களோடு பழகக்கூடியதுமான நவீன ரோபோவாகும்.

மேற்படி ரோபோவானது நகைச்சுவையுணர்வு உடையதும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியதுமாகும்.

இது அடர்த்தியான காற்றினால் (கொம்பிரஸ் எயார்) வழுவூட்டப்படுகின்றது.

இது முற்றிலும் அலுமினியத்தினால் ஆக்கப்பட்டதாகும்.

மேற்படி ரோபோவானது கோர்னிய நிறுவனமொன்றினால் உருவாக்கப்பட்டதாகும்.

தற்போது இது நாஸாவினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

5 அடி 9 அங்குலமான இந் ரோபோ புளோரிடாவில் உள்ள கெனடி விண்கல நிலையத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களை வழிநடத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்காக நாஸா மேற்படி நிறுவனத்திற்கு 70,520 யூரோக்களை செலுத்தியுள்ளது.

மேலும் நாஸாவின் R2 எனப்படும் முக்கிய விண்வெளி செயற்திட்டத்திற்கு இது அனுப்பப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தொடுதிரையுடன் கூடிய இண்டர் பேஸினைக்கொண்டுள்ள மேற்படி ரோபோவானது அதன் செயற்பாடுகளை முன்கூட்டியே புரோகிராம் செய்துகொள்ளமுடியும்.

ரோபோ தெஸ்பியன் 2001 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தனது ரீடர், பி.டி.எப் விவ்வரில் குறைபாடு உள்ளதாக பிரபல மென்பொருள் நிறுவனமான 'அடோப் சிஸ்டம்ஸ்' கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதன் மற்றுமொரு மென்பொருளான 'பிளாஷ்'ஷிலும் குறைபாடுகள் உள்ளன என அது தற்போது அறிவித்துள்ளது.

மேற்படி பிளாஷில் உள்ள குறைபாட்டை தாம் 2 வாரங்களிலும், ரீடரில் உள்ளவற்றை 3 வாரங்களிலும் நிவர்த்தி செய்வதாக அது அறிவித்துள்ளது.

இக்குறைபாடுகளைப் பயன்படுத்தி 'விண்டோஸ்' கணினிகளைத் தாக்குவதாகவும் இதன் காரணமாக தாக்குதல் நடத்துபவர்கள், கணினியை முற்றாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சாத்தியப்பாடும் உள்ளதாக 'அடோப்' தெரிவித்திருந்தது.

எனினும் மேற்படி குறைபாடு மெக், லினக்ஸ், சொலாரிஸ் மற்றும் கூகுளின் அண்ட்ரோயிட் ஆகியவற்றுக்கான பிளாஷிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்திசெய்ய 'மைக்ரோசொப்ட்' மற்றும் 'அடோப்' என்பன துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 செப்டம்பர் 2010


தொடுகையை உணரக்கூடிய இலத்திரனியல் தோலினை கலிபோர்னிய பேர்கலி பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கியுள்ளது.

மேற்படி இலத்திரனியல் தோலானது எந்திரனியல் (ரோபோடிக்) மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஆய்வுகூட பரிசோதனை அளவிலேயே இருக்கும் மேற்படி தோலானது, மனித தோலைப் போன்று மிக வேகமாக தொடுகைகளை உணர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமுக்கத்தை உணரக் கூடிய உயர் உணர்திறனை கொண்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இலத்திரனியல் தோலானது சிலிக்கோன், நெனோ வயர்கள் மற்றும் ஜேர்மானியம் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் நெனோ ஸ்கேல் ட்ரான்ஸ்சிஸ்டர் மற்றும் இலகுவான இறப்பர் என்பனவும் இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை மிகவும் மலிவாக உருவாக்க முடியுமெனவும், இதன் இயக்கத்திற்கு மிகக் குறைந்த அளவிலான மின்சக்தியே ( வோல்டேஜ்) தேவையெனவும் கருதப்படுகின்றது.

எதிர்காலத்தில் இரசாயனப் பொருட்கள் மற்றும், வெப்பம், ரேடியோக் கதிர்கள் என்பனவற்றுக்குத் துலங்களைக் காட்டக்கூடிய சென்ஸர்களை மேற்படி தோலில் உள்ளடக்க தாம் எதிர்ப்பார்ப்பதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் மனிதர்கள் உள் நுழைய முடியாத இடங்களில் கூட இலத்திரனியல் தோல் கொண்ட ரோபோக்களைக் கொண்டு தாம் நுழைய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

09 செப்டம்பர் 2010

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்களைத் தொடர்ந்து தனது சேவைகளில் புகுத்திவருகிறது கூகுள்.

தனது தேடல் சேவையில் புதியதொரு தொழில்நுட்பத்தினை தற்போது கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் தேடல் பொறியின் மூலம் குறித்ததொரு விடயத்தினை தேடுவதற்காக, நாம் அவ்விடயத்தினை தேடல் பொறி பக்கத்தின் நடுவே தட்டச்சு செய்யும் போதே அதற்கான விடைகள் ( ரிசல்ட்ஸ்) திரையில் உடனடியாகத் தோன்றும். இதுவே அந்தச் சிறப்பம்சமாகும்.

இது 'இன்ஸ்டன்ட் சேர்ச்' என அழைக்கப்படுகின்றது. மேற்படி அம்சமானது பாவனையாளர் தேடும் விடயத்தினை மிகவும் குறுகிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதினை அடிப்படையாகக் கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வம்சமானது தனது சக போட்டியாளர்களான 'யாஹூ' மற்றும் 'மைக்ரோசொப்ட்' என்பவற்றுக்குப் பெரும் போட்டியாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மனித எண்ணங்களை வார்த்தையாக மாற்றக்கூடிய புதிய இயந்திரத்தை உட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.

மேற்படி இயந்திரமானது மனித மூளையின் சமிக்ஞைகளை வார்த்தைகளாக மாற்றக்கூடியது.

இது விஞ்ஞான உலகில் புதிய மைல் கல்லெனவும் இதன் செயற்பாடுகள் 90% சரியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் இயந்திரத்தின் சென்சர்கள் மண்டையோட்டின் கீழ் பகுதியில் அதாவது மூளையின் மேற்பரப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுப் பேச முடியாதவர்களின் எண்ண ஓட்டத்தினை அறிந்து கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

இது முன்னைய கண்டுபிடிப்புக்களை விட அதிநவீனமானதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானிய இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனமான 'ஸார்ப்' தனது முப்பரிமாண (3D) கையடக்கத் தொலைபேசி ஒன்றை அறிமுகம் செய்கின்றது.

இத்தொலைபேசியின் கெமரா மூலம் முப்பரிமாண புகைப்படங்களைப் பிடிக்க முடியும்.

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு முப்பரிமாண கண்ணாடிகளை அணிய வேண்டிய அவசியமில்லை.

இக்கையடக்கத் தொலைபேசியின் கெமரா இரண்டு வில்லைகளைக் (லென்ஸஸ்) கொண்டது.

'ஸார்ப்' தொலைபேசியானது 'பரலக்ஸ் பெரியர்' திரையைக் கொண்டது.

இதன் விலை மற்றும் விற்பனைக்கு வரும் திகதி பற்றி 'ஸார்ப்' உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை.

கூகுள் ' குரோம் ' இயங்குதளம் தனது 2ஆவது பூர்த்தியை நேற்றுக் கொண்டாடியது.

இந்நிலையில் அது ' குரோம் 6 ' என்ற மேம்படுத்தப்பட்ட புதிய தொகுப்பினை நேற்று வெளியிட்டுள்ளது.

தற்போதைய அறிக்கைகளின்படி, இயங்குதள சந்தையின் பிரகாரம் அதன் பங்கு 7.5 வீதமாகும்.

அதன் போட்டியாளரான 'இன்டர் நெட் எக்ஸ்புளோரர்' மற்றும் 'மொஸிலா பயர்பொக்ஸ்' என்பன முறையே 60.4% மற்றும் 22.9% இயங்குதள சந்தையைக் கொண்டுள்ளன.

கூகுள் குரோமின் முன்னைய தொகுப்பானது சுமார் 15 முக்கிய பாதுகாப்பு குறைபாடுகளினை கொண்டதாகக் காணப்பட்டது.

ஆனால் தற்போதைய ' குரோம் 6 ' தொகுப்பானது அக்குறைபாடுகள் அற்றதெனவும் நன்கு மேம்படுத்தப்பட்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது முன்னைய தொகுப்பினை விட 6 மடங்கு வேகமாக இயங்கக்கூடியதுடன் மேம்படுத்தப்பட்ட 'யூஸர் இன்டர் பேஸ்'ஸினையும் கொண்டதாகும்.

இது 'ப்ளேஸ் ஐ' கொண்ட நிலையிலேயே கிடைக்கப் பெறுகின்றமை மற்றும் எச்டிஎம்ல் 5 வசதிகளைக் கொண்டுள்ளமை விசேட அம்சங்களாகும்.

மேலும் இலகுவான பாவனைக்காக 'புக்மார்க்ஸ்' பட்டன்கள் இயங்குதளத்தின் புதியதொரு இடத்தில் தரப்பட்டுள்ளன.

மேற்படி இயங்குதளத்தினை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

02 செப்டம்பர் 2010

அப்பிள் நிறுவனமானது தனது இசைப்பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் இசையை பிரதானப்படுத்திய சமூகவலை அமைப்பு பிங் , நவீன 'ஐ பொட் டச்' மற்றும் 'ஐ பொட் நெநோ' என்பவற்றை நேற்று அறிமுகப்படுத்தியது.


                                                      ஐ பொட் டச்

   

ஐ பொட் நெநோ


 


மேற்படி 'ஐ பொட் நெநோ' ஆனது தனது முன்னைய 'ஐ பொட் நெநோ'வுடன் ஒப்பிடும் போது மிகச் சிறியதாகும். மேலும் அதன் பாரமும் மிகக் குறைவானது. தொடுந்திரையுடன் அமைக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம். 'வொயிஸோவர்', 'எப் எம் ரேடியோ' , 'நையிக் + மற்றும் 29 மொழிகளில் என்பன இதன் மேலதிக வசதிகளாகும்.

மேலும் 8 ஜிபி நினைவகத்தினைக் கொண்ட 'நெநோ 149' அமெரிக்க டொலர் விலையிலும் 16 ஜிபி 179 அமெரிக்க டொலர் எனவும் விலையிடப்பட்டுள்ளன.

                                                          

                                                'ஐ டியூன் பிங்'
                         


மேற்படி சமூக வலைப்பின்னல் தளமானது அப்பிளின் பிரபல இசை மென்பொருளான 'ஐ டியூனு'டன் சேர்ந்ததாகும்.

இது இசைப் பிரியர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சமூக வலைப்பின்னல் தளம்.

இதன் மூலம் பாவனையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான இசைக்கலைஞர்களைப் பின்பற்ற முடியும். மேலும் அவர்கள் கொள்வனவு செய்யும் இசை வெளியீடுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.

மேலும் அக்கலைஞரின் இசை வெளியீடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

எமது நண்பர்களுக்குப் பிடித்தமான இசை தொடர்பான தகவல்களினை இதனூடாகப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் அவர்கள் தெரிவு செய்த பாடல்களையும் செவிமடுக்க முடியும்.

'ஐ போன்' மற்றும் 'ஐ பொட் டச்' என்பவற்றினூடக இச்சேவையைப் பெற முடிகின்றமை இதன் சிறப்பம்சம்.


 

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) என்பது பிரபல மின்னஞ்சல் சேவை. பல்வேறு நவீன வசதிகளை தமது பாவனையாளர்களுக்கு கூகுள் வழங்கி வருகிறது.

தற்போது கூகுள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்குப் புதியதொரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதியானது ' ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' என அழைக்கப்படுகின்றது.

இது பாவனையாளர் ஒருவர் பெற்றுக் கொள்ளும் மின்னஞ்சல்களை அதன் முக்கியத்துவ அடிப்படையில் வேறுபடுத்துவதாகும்..

இதன் போது பாவனையாளரின் இன்பொக்ஸ் 3 பிரிவுகளாக பிரிக்கப்படும்.

முக்கியமான மின்னஞ்சல்கள் 'இம்போர்ட்டன்ட் அண்ட் அன்ரெட்' பிரிவுக்குள் உள்ளடக்கப்படும். மற்றைய மின்னஞ்சல்கள் அடுத்தடுத்த பிரிவுகளுக்குள் சேர்க்கப்படும்.

இம்மின்னஞ்சல்களை வேறுபடுத்துவதற்காக ஜிமெயில் சில விசேட சமிக்ஞைகளை உபயோகப்படுத்துகின்றது.

நாம் அதிகமாக எவரிடமிருந்து மின்னஞ்சல்களினை பெறுகின்றோம் மற்றும் பதிலளிக்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தொழிற்பாடு நடைபெறுகின்றது.

மேலும் மின்னஞ்சல் கணக்கில் காணப்படும் '+' பட்டன் மூலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களையும் ' - ' பட்டன் மூலம் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவற்றையும் குறிப்பிட்டுக் கொள்வதன் மூலமும் மின்னஞ்சல்களை வேறுபடுத்திக் கொள்ளலாம்.

கூகுள் நிறுவனமானது கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாகத் தனது ஜிமெயில் பாவனையாளருக்கு அறிமுகப்படுத்திவரும் 3ஆவது நவீன வசதி இதுவாகும்.

தொடர்புகளை நிர்வகிக்கும் ( கொன்டாக்ட் வசதி) வசதி, அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி என்பனவே அவையாகும்.
பேஸ்புக் நாம் அனைவரும் அறிந்ததும் எம்மில் பலர் உபயோகித்து வருவதுமான ஒரு சமூக வலைப் பின்னல் தளம்.

இந்நிலையில் பேஸ்புக்கிற்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் புதிய சமூக வலைப்பின்னல் தளமொன்று செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இத்தளமானது ' டயஸ்போரா ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி தளத்தினை உருவாக்குவதற்காக நியூயோர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 200,000 அமெரிக்க டொலர் பணத்தினைத் திரட்டினர்.

பேஸ்புக்கின் உருவாக்குனர் மார்க் ஸுக்கர்பேர்க்கும் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தார் என்பது மேலதிகத் தகவலாகும்.

இத்தளத்தின் தொழில்நுட்ப அம்சங்களை நோக்குமிடத்து பேஸ்புக்கின் அடிப்படை அம்சங்களான மல்டிமீடியா செயாரிங், ஸ்டேடஸ் அப்டேட், செட்டிங் வசதி என்பவற்றைக் கொண்டுள்ளது.

இதனுடன் வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினையும், இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதியினையும் கொண்டமையவுள்ளது.

இதன் சிறப்பம்சம் இது ' ஓப்பன் சோர்ஸ் ' என்பதுதான். இதன் காரணமாக, இத்தளத்தின் பாவனையாளர்கள் தங்களின் அனைத்து விதமான தகவல்கள் மற்றும் செயற்பாடுகளைத் தாங்களே நிர்வகிக்க முடியும்.