Blogger இயக்குவது.
Loading...

Labels

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Followers

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Sociable

Blog Archive

இந்த வலைப்பதிவில் தேடு

30 நவம்பர் 2010                                          
சமூக வலைப்பின்னல்களின் தாக்கம் மற்றும் அதன் மீதான ஈர்ப்பு தினமும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் இவ்வலையமைப்புகளை உருவாக்குவதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

நேற்றைய நமது செய்தியும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் மீ என்ற சமூக வலையமைப்பினை பற்றியதாகும்.

இந்நிலையில் இன்றைய செய்தியும் சமூகவலைப்பின்னல் ஒன்றினைப் பற்றியதே. 

ஆம், பேஸ்புக் வலையமைப்பின் ஸ்தபகர்களில் ஒருவரான கிறிஸ் ஹகஸ் என்பவரால் 'ஜூமோ' http://www.jumo.comஎன்ற சமூக வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 


                                           

இதன் சிறப்பம்சம் யாதெனில் மற்றைய சமூகவலையமைப்புகளைப் போல் பொழுதுபோக்கு அம்சங்களை அடிப்படையாகக்கொள்ளாமல் சமூக நலன், பிரச்சினைகள், அதற்கான தீர்வு ஆகியவை தொடர்பில் இவ்வலையமைப்பு ஆராய்கின்றது. 


இவ்வலையமைப்பில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடும் இலாபநோக்கற்ற சுமார் 3ஆயிரம் அமைப்புக்கள் தங்களை பதிவுசெய்துள்ளன. இவற்றைப் பின்தொடர்வது மட்டுமல்லாமல் உதவிகளையும் வழங்கமுடியும். 

பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், எச்,ஐ.வி, குடிநீர்தொடர்பான பிரச்சினை, சுகாதார சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைகள், கல்விசார் பிரச்சினைகள், காலநிலை தொடர்பான பல்வேறு விடயங்கள் இவ்வலையமைப்பின் ஊடாக ஆராயப்படுகின்றன. இதன் முக்கிய குறிக்கோள்களாக குறிப்பிடப்படுவன


- Find isues and projects you care about
- Follow the latest news and update
- Support their work with your time, money, and skills 


மேலும் உறுதிப்படுத்தப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்புகள் ஜூமோவில் தங்களை பதிவுசெய்துகொள்ளவும் முடியும். 

பேஸ்புக் கணக்கினை கொண்டிருப்பவர்கள் இதில் தற்போது இணைந்து கொள்ளமுடியும்.


                       

8 வயது சிறுவன் ஒருவனின் நடனக் காணொளியானது தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹவாயில் வசிக்கும் அஞ்சலோ என்ற இச் சிறுவன் பிரோக் நடனத்தினால் பார்ப்பவர்கள் அனைவரினையும் ஆச்சர்யப்படவைக்கின்றான்.

தன்னை விட வயது கூடிய சக போட்டியாளனிடம் இவன் சவால்விடுவதும், கேலி செய்வதும் அனைவரையும் மெய்மறந்து இரசிக்கவைக்கின்றது.

இவனது போட்டியாளரும் பிரபலம் பெற்ற ஓர் நடனக் கலைஞர் ஆவார்.

அவனது நடனத்தினை கண்டு நீங்களும் ஆச்சரியப்படுங்கள்.
கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவதாக கூறப்படும் 'கூகுள் மீ' எனப்படும் சமூக வலைப்பின்னல் (Social Network) தளமானது அடுத்தவருடமே அறிமுகப்படுத்தப்படுமென தகவல்கள் கசிந்துள்ளன. 

ஆரம்பத்தில் இவ்வருட இறுதியில் அது வெளியிடப்படுமென கூறப்பட்ட போதிலும் தற்போது அத்திகதி அடுத்தவருடம் மார்ச் அல்லது ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

தனது உருவாக்கத்தினை கூகுள் மிக இரகசியமாக பேணி வருகின்றது.

சமூகவலைப்பின்னல் சந்தையில் பேஸ்புக் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. அதன் தற்போதைய மொத்த பாவனையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனுக்கும் அதிகமாகும்.

இதனை முறியடிப்பதற்கு கூகுள் பல்வேறு சமூக வலைப்பின்னல் தளங்களை உருவாக்கியிருந்தது ஆனால் அவை அனைத்தும் பேஸ்புக் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. உதாரணமாக ஓர்குட்(Orkut), கூகுள் பஸ்(Google Buzz), கூகுள் வேவ்(Google Wave). 

இந்நிலையிலேயே மற்றுமொரு முயற்சியாக 'கூகுள் மீ' தளத்தினை கூகுள் உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் அதன் மற்றைய பக்கத்தில் பேஸ்புக்கானது மெஸேஜஸ், பிளேசஸ், குரூப்ஸ் வசதிகள் மற்றும் ஸ்கைப்புடன் இணைவு, மைஸ்பேஸுடன் இணைவு என இன்னுமொரு பரிமாணத்திற்கு சென்று கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 29 நவம்பர் 2010மின் சக்தியில்லாமல் தானாக ஒளிரக்கூடிய மரங்களை தாம் உருவாக்கிவருவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் இம்மரங்களை தெருவிளக்குகளுக்கு பதிலாக உபயோகப்படுத்தமுடியும்.

இதற்காக உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் சிலவகையான பூச்சிகள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களில் சோதனை நடத்தப்பட்டுவருகின்றது. பயோலுமினசென்ஸ் எனப்படுவது (Bioluminescence) உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஆற்றலாகும்.

இவ்வாற்றலானது குறிப்பிட்ட சில ஜீவராசிகளுக்கே சாத்தியமாக உள்ளது.இவற்றின் மரபணுக்களும் இதற்கான ஒரு காரணமாகும்.

எனவே மின்மினிப்பூச்சிகள் மற்றும் சில மின்னும் கடல்வாழ் பக்டீரியாக்களின் மரபணுக்களைக் கொண்டும் ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இவை வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளன.

இவை மரங்களுக்கு மட்டுமன்றி ஒளிரும் பல்வேறு பல்வேறு பொருட்களுக்கும் பயன்படுத்த முடியுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பயோலுமினசென்ஸ் ஆற்றல் கொண்ட விலங்குகள் தொடர்பான காணொளிகள்
26 நவம்பர் 2010

இன்றைய நமது செய்தியாக உங்களுக்கு பயன் தரக்கூடிய தளங்கள் சில

1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.oldversion.com

2) இணையத்தில் நமது புகைப்படங்களை இலக்கங்களாக மாற்றும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.picascii.com

3) 3D-ல் படம் வரையக்கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.3dtin.com

4) கார்களை பழுதுபார்க்கக் கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி http://www.vehiclefixer.com

5) இணையத்தில் யுனிட் கன்வர்டர் செய்யக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/

6) இணையத்தினூடாக பி.டி.எப் பைல்களை எக்செல் பைல்களாக மாற்ற உதவும் ஓர் தளம் (PDF to Excel)

இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com

7) இணையத்தினூடாக உங்கள் புகைப்படத்தை முப்பரிமாணமாக (3D) மாற்ற ஓர் தளம்

இணையதளமுகவரி : http://3d-pack.com

8) உங்கள் ஓவியப்படைப்புகளை விற்பனை செய்ய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.artflock.com

9) யுடியூப் வீடியோவினை எம்.பி.3 (MP 3 ) பாடலாக மாற்றுவதற்கான ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.listentoyoutube.com

10) கணனியின் அனைத்து மென்பொருட்களிற்குமான சோர்ட்கட்களை கற்றுத்தரும் ஓர் தளம்.

இணையதள முகவரி : http://www.shortcutworld.com

24 நவம்பர் 2010

தாயின் வயிற்றில் இருக்கும் சிசு ஒன்றின் வேகமான அசைவுகள் பதியப்பட்ட காணொளியானது தற்போது சுவாரஸ்யமாக பேசப்பட்டுவருகிறது. குழந்தை அங்கும் இங்கும் அசைவது வீடியோ காட்சியில் பதியப்பட்டுள்ளது.

அந்த அசாதாரண அசைவுகளை நீங்களும் கண்டு ஆச்சரியம் அடையுங்கள் !

23 நவம்பர் 2010


மனித இனமானது சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியாதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

ஆரம்பத்தில் தனித்து வாழத்தொடங்கிய மனித இனம் பின்னர் சமூக குழுக்களானது. இதனைத்தொடர்ந்து வெளியுலக தொடர்புகள் மூலம் தன்னை மேம்பட்ட , வளர்ச்சியடைந்த இனமாக மாற்றிக்கொண்டது.

மனித சமூகமொன்றின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் வெளியுலகத்தொடர்புகள் மற்றும் உறவுகள் என்றால் அது மிகையாகாது.

எனினும் அவ்வகையான வெளித்தொடர்புகள் அற்ற, முற்றிலும் வேறுபட்ட , நாகரீக வளர்ச்சியடையாத மனித இனக்குழுக்களும் இருக்கவே செய்கின்றன.

அவ்வகையான இனக்குழுவொன்று அண்மையில் பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெசானிய பழங்குடிகள் என இவ்வினம் இனங்காணப்பட்டுள்ளது.

இப்பழங்குடியினமானது இதுவரை நாகரிக வளர்ச்சி என்பதை அறியவில்லையென அவர்களைக் கண்டறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெரு நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள ' குகாபாகொரி நாவுஹா நான்டி என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கெமராக்களில் மேற்படி இனத்தின் நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடந்தே அதிகாரிகள் இவர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் பனை ஓலை முதலான இலைவகைகளைக்கொண்டு தங்களது குடிசைகளை அமைத்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு இவர்கள் பேசும் மொழி புரியவில்லை. இவர்கள் இடுப்பைச்சுற்றி ஆடையையும் அணிந்துள்ளனர்.

தற்போது பெரு நாட்டின் அரசு அவ்வினம் தொடர்பான காணொளிக்காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட அனுமதித்துள்ளது. 


வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர். 

இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. 

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

22 நவம்பர் 2010


                              


மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்னும் ஆய்வு நிலையில் உள்ள இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

முதுமையைத் தடுத்து மனிதனின் ஆயுளை நீடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர்.

' செர்டுயின் ' என்ற ஜீனே முதுமையை கட்டுப்படுத்துகின்றது. இதனைத் தூண்டும் மருந்தினையே ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர். 

ஒரு மாத்திரையை உட்கொள்ளும் போது, வயதானாலும் நினைவாற்றல் குறையாது, உடல் உறுப்புகள் தளராது, மாரடைப்பு ஏற்படாது என ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது. 

விலங்குகள் மற்றும் மனிதர்களிடமும் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த பக்கவிளைவுகளையும் இது ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஆயுளை மேலும், மேலும் நீடிக்க இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் பின்விளைவுகள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

21 நவம்பர் 2010
நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான பூனைகள் பொதுவாக சாந்தமானவை.

அவை எலிகளைப் பிடிப்பதும், நாய்களுக்கு அஞ்சுவதும் நாம் தினசரி காணும் காட்சிகள்.

ஆனால் பூனைகள் உண்மையாக அவ்வாறில்லை. சிலவேலைகளில் தம்மை எதிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மூர்க்கமாக மாறுவதுமுண்டு.

அத்தகைய சம்பவமொன்று அமெரிக்க லூசியானாவிலுள்ள பண்ணையொன்றில் இடம்பெற்றுள்ளது.

அக்காட்சியை நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.

19 நவம்பர் 2010

' கரணம் தப்பினால் மரணம் ' என்பது முதுமொழி ஆனால்
டெனி மெகெஸ்கில் அதனை பொருட்படுத்துவதில்லை

ஆம், இவர் ஒரு பிரபல சைக்கிங் வித்தைக்காரராவார்.

நன்கு தேர்ச்சிப்பெற்ற இவரின் சைக்கிளிங் திறமையானது அனைவராலும் பாராட்டப்படுகின்றதொன்றாகும்

மயிர்க்கூச்செறியும் அவரது சைக்ளிங் திறமையை பார்ப்பவர்களை பரவசப்படுத்துவது உறுதி!

வார்த்தைகளால் விளக்குவதை விட அவரது திறமையினையும் துணிச்சலைனையும் இக்காணொளியில் கண்டுமகிழுங்கள் !
             
மைஸ்பேஸ் மற்றும் பேஸ்புக் ஆகியன இரண்டு பிரபல சமூக வலையமைப்புகளாகும்.

ஆனாலும் தற்போது முதலிடம் பேஸ்புக்கிற்குதான். காரணம் அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை . சுமார் 500 மில்லியன்களுக்கும் அதிகமான பாவனையாளர்கள் இதற்கு உள்ளனர். 

இந்நிலையில் மைஸ்பேஸ் பாவனையாளர்கள் இனி தமது மைஸ்பேஸ் கணக்கினூடாக பேஸ்புக்கினுள் நுழையமுடியும். 

இதனை மைஸ்பேஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

இதன்படி இவ்விரு சமூக வலையமைப்புகளுக்கிடையே பல்வேறு வசதிகளைப் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

இதன் வசதிளை இக் காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


18 நவம்பர் 2010

            


சகலதுறைகளிலும் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றது கூகிள் (சமூகவலையமைப்பினை தவிர). 

இந்நிலையில் தற்போது கூகுள் புடிக்.கொம் (boutique.com) என்ற இணைய பெஷன் வணிகத்திற்கான தளமொன்றினை தொடங்கியுள்ளது.

இத்தளத்தின் பிரதான நோக்கம் பெண்களின் ஆடைகள் மற்றும் அணிகலன்களைக் கொள்வனவு செய்வதற்காக இணையத்தினை நாடுபவர்களை அதற்கான சரியான விற்பனை தளங்களுக்கு அனுப்புதலாகும்.

உதாரணமாக இது ஒரு தேடல்பொறி அல்லது இடைமுகவர் போன்று செயற்படவுள்ளது.

இணையமூலமான ஆடை அணிகள் வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதனைக் கருத்தில் கொண்டே கூகுள் இக்களத்தில் குதித்துள்ளதாகக் கருதப்படுகின்றது. எனினும் இச்சேவையானது தற்போது அமெரிக்காவுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதனை சிறிதுகாலத்தில் விஸ்தரிக்கும் எண்ணம் உள்ளதாகவும் கூகுள் தெரிவிக்கின்றது.

ஏற்கனவே ஈபே.கொம்( ebay.com) , அமெசொன்.கொம்(amazon.com) ஆகியன இணைய வர்த்தகத்தில் ஜாம்பவான்களாக உள்ளன.

கூகுள் கடந்த ஆகஸ்ட் மாதம் லைக்.கொம்(like.com) என்ற விசுவல்( visual) தேடல் தளத்தினை 100 மில்லியன் டொலர்களுக்குக்ச்ச்ச் கொள்வனவு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

17 நவம்பர் 2010தொழில்நுட்ப உலகில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்ட சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக இன்றைய செய்தி அமைகின்றது. 

பேஸ்புக்கின் மெசேஜிங் சேவை 

அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு சேவையாகும். ஆரம்பத்தில் மின்னஞ்சல் சேவையெனக் கூறப்பட்டது.
எனினும் இது ஒரு மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் வசதியுடன் கூடிய மெசேஜிங் சேவையென பேஸ்புக் அறிவித்துள்ளது.

பேஸ்புக் கணக்குகளைத்தாக்கிய புதிய பக் (Bug) 

பேஸ்புக் கணக்குகளைப் புதியதொரு பக் (Bug) தாக்கியது. 
இதன் காரணமாக பலரின் கணக்குகள் செயலிழந்துள்ளதாக பேஸ்புக்கிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதனை கூடிய விரைவில் சரி செய்வதாகவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.

மீண்டும் பிற்போடப்பட்ட கூகுளின் 'ஜிஞ்ஞர் பிரட்' வெளியீடு 

கூகுள் நிறுவனத்தின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மற்றுமொறு இயங்குதள தொகுப்பான அண்ட்ரோயிட் 2.3 'ஜிஞ்ஞர் பிரட்' வெளியீடு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. 
கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளமானது உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயர் பொக்ஸ் 4 பீடா வெளியீடு 

பிரபல இயங்குதளமாக மொஸிலா பயர்பொக்ஸ் 4 சோதனைத்தொகுப்புக்களை (Beta) தற்போது வெளியிட்டுள்ளது. 
முன்னையதை விட நன்கு மேம்பட்ட கிராபிக்ஸ் வசதி, ஜாவா வசதியினை இது தரவல்லது என அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

40 நாட்களில் 1 மில்லியன் அண்ட்ரோயிட் 2.2 மொபைல்களை விற்பனை செய்த எல்.ஜி 

பிரபல எல்.ஜி (LG) நிறுவனம் சுமார் 1 மில்லியன் அண்ட்ரோயிட் 2.2 இயங்குதள ஒப்டிமஸ் ரக மொபைல்களை விற்பனை செய்ததாக அறிவித்தது. 
இது தனது விற்பனை வரலாற்றில் ஒரு மைல் கல்லென எல்.ஜி. அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டியானி (Tianhe) - 1 A உலகின் அதிவேக சுப்பர் கணினியை முந்தும் கணினியை வெளியிடவுள்ள அமெரிக்கா 

உலகின் அதிவேக கணினி டியானி (Tianhe) - 1 A என ஏற்கனவே செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. 
எனினும் இக்கணினியின் வேகத்தை முறியடிக்கக் கூடியதும் இதனை விட 8 மடங்கு வேகமானதுமான ஒரு கணினியை 2012இல் அமெரிக்கா வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

16 நவம்பர் 2010

                                                        

                              

உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் துறையாக ரோபோடிக்துறை விளங்குகின்றது.

இந்நிலையில் ' ஜெமினொயிட் எப் ' (Geminoid F) என பெயரிடப்பட்டுள்ள நடிக்கும் திறன் கொண்ட ரோபோவினை ஜப்பானியர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதனை உருவாக்கியவர் 'ஹிரோசி இசிகுரோ' என்ற ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஜப்பானிய ரோபோ வடிவமைப்பாளர் ஆவார்.

பொதுவாக இவரது அண்ரோயிட் ரோபோக்கள் 1.2 மில்லியன் அமெரிக்கடொலர்கள் விலைகொண்டவை.

இந்த ரோபோவானது, அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பாத்திரமொன்றினை ஏற்று நடித்திருந்தது.

இதன் அசைவுகள் மற்றும் உணர்வுகளை நாடக மேடைக்குப் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அறையில் நடிகை ஒருவர் வெளிப்படுத்தினார்.

இப்பாவனைகள் கெமராவின் உதவியோடு ரோபோவினால் இணங்காணப்பட்டதுடன் ரோபோ அதற்கேற்றவாறு நடித்திருந்தது.

இதன் குரலுக்காக மைக்ரோபோன் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் நடிப்புத்திறனை நீங்களும் கண்டு களியுங்களேன்.

04 நவம்பர் 2010

                                   

பார்வை  இழந்தவர்களுக்கு பார்வையை வழங்கக்கூடிய அதிநவீன 'சிப்' ன்றினை ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்

இதன் படி கண்களின் பின்பகுதி விழித்திரையில் 'சிப்' ஒன்று பொருத்தப்படுகின்றது

இதனூடு ஒளிகடத்தப்படும்போது அது இலத்திரனியல் தூண்டல்களாக மாற்றப்பட்டு பார்வை நரம்புகளுக்குச் செலுத்தப்படுகின்றது

பார்வையற்றவர்களுக்கு இதன்மூலம் பொருளை ங்கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது

ந்தச் 'சிப்' பானது 'ரெடினிடிஸ் பிக்மென்டோஸா' எனப்படும் பரம்பரை கண்நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பெரிதும் பயனளிக்குமென நம்பப்படுகின்றது.

.ஜி. என்ற ஜேர்மனிய நிறுவனம்,  'ஒப்தல்மிக்' ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து  இதனைத் தயாரித்துள்ளது.

இவ்வுபகரணத்தில் சுமார் 1500 ஒளி உணர் 'சென்ஸர்'கள் பொருத்தப்பட்டுள்ளன.<br><br>

இது தொடர்பான காணொளிகளை இங்கு காணலாம்.1
03 நவம்பர் 2010

                                         
கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை ( Chrome OS ) அறிமுகம் செய்திருந்தது. 

தற்போது 'இன்வென்டெக் ' எனப்படும் தாய்வான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே இதனை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏஸர் மற்றும் ஹெவ்லட் பெக்கார்ட் நிறுவங்கள் கூகுளின் இவ்வியங்குதளத்தினை கொண்டியங்கும் கணனிகளை உருவாக்கிவருவதுடன் அவை இவ்வருட இறுதியில் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஏற்கனவே கூகுள் தனது சொந்த தயாரிப்பான நெக்ஸஸ் (Nexus) எனும் 'ஸ்மார்ட்' போன்களை விற்பனை செய்திருந்தது. எனினும் இவை சந்தையில் வரவேற்பைப் பெறவில்லை. 

இருந்தபோதிலும் கூகுள் தனது அடுத்தமுயற்சியில் இறங்கியுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.